• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-12 16:33:19    
சீனாவில் டிஜிட்டல் தொலைக்காட்சி தொழிலின் வளர்ச்சி

cri

2008ஆம் ஆண்டு வரை, டிஜிட்டல் தொலைக்காட்சியின் ஆய்வு, வளர்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனைக்காக இந்நிறுவனம் 100 கோடி யுவானை முதலீடு செய்யும் என்று தெரிகிறது.

வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனங்கள், டிஜிட்டல் தொலைக்காட்சி தொழிலின் வளர்ச்சியை, மாபெரும் வணிக வாய்ப்பாகக் கருதுகின்றன. உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக் கூடிய முக்கிய திட்டப்பணிகளில் இப்புதிய தொழிலை சீனாவில் உள்ள சில உள்ளாட்சி அரசாங்கங்கள் சேர்த்துள்ளன. வட சீனாவில் உள்ள Bao Tou நகரை எடுத்துக்காட்டாக கூறலாம். இது சீனாவிலுள்ள ஒரு பழைய தொழில் தளமாகும். இரும்புருக்கு, அலுமினியம், அரிய மண், மின்னாற்றல், இயந்திர சாதனம் உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை தொடர்ந்து வளர்ப்பதற்கு சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் டிஜிட்டல் தொலைக்காட்சி தொழிலை வளர்ப்பதன் மூலம், உள்ளூர் தொழில் கட்டமைப்பைச் சரிப்படுத்தி, பொருளாதார சமூக வளர்ச்சியை விரைவுபடுத்த Bao Tou நகராட்சி அரசு தீர்மானித்துள்ளது.

சீனாவில், டிஜிட்டல் தொலைக்காட்சி தொழில் அண்மையில் தோன்றியதும், அன்னிய முதலீட்டாளர்கள் பலரின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. சில முதலீட்டு நிறுவனங்கள், டிஜிட்டல் தொலைக்காட்சியின் சில துறைகளில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய டிவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, டிஜிட்டல் தொலைக்காட்சி, புதிய தொலைக்காட்சி சேவை முறைமையாகும். இந்தச் சேவையில் நிகழ்ச்சி தயாரிப்பு, இணையத்தை இயக்குதல், மென் பொருள் மற்றும் தளவாட வசதி, முனையம் உருவாக்குதல் ஆகிய சேவைகள் இதில் அடங்கும். அண்மையில், டிஜிட்டல் தொலைக்காட்சி தொழில் வளர்ச்சியடைந்திருப்பதால், இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவு. இது தொடர்பான வரையறைகள் முழுமையாக இல்லை என்ற போதிலும், தொழில் தொடர் அமைப்பில், பல்வேறு தொழில் நிறுவனங்கள், இதனை வளர்ச்சி வாய்ப்பு உள்ள அரிய தொழில் என கருதுகின்றன.


1  2  3