• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-14 09:40:55    
சுற்று சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் லியேள சியேள யீ

cri

முன்னாள் அரசு தலைவர் கிலின்டணுடன்

பெய்ஜிங்கிலிலுள்ள பூகோள கிராமம் ஒரு சுற்றுசூழல் பண்பாட்டு மையமாகும். ஒரு சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பாகவும் இது திகழ்கிறது. பெய்ஜிங் பூகோள கிராமம் என்று, மக்கள் இதை அழைக்கின்றனர். பசுமைக் குடியிருப்பு கட்டுமானத்தையும் குடிமக்களிடையே சுற்று சூழல் பாதுகாப்பு உணர்வையும் வளர்ப்பதில் இந்த அமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது. இந்த அமைப்பை நிறுவியவர், லியேள சியேள யீ அம்மையார்.

தத்துவத்தைக் கற்கும் லியேள சியேள யீ, சிந்தனைத்திறன் மிக்கவர். தாம் நினைத்ததை செயல்படுத்தும் துணிவு கொண்டார். அவருடைய நல்ல நண்பரான, பூகோள கிராமத் திட்டத்தின் நிர்வாக பணியில் ஈடுபட்ட சூ லீ அம்மையார் கூறியதாவது:

லியேள சியேள யீ துணிவு மிக்கவர். அவர் எப்போதும் கவலைப்பதே இல்லை என்றார் சூ லீ.

மக்களின் சுற்று சூழல் பாதுகாப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு, லியேள சியேள யீ பெய்ஜிங்கின் புறநகர்பகுதியில் 180 ஹெக்டர் பரப்பளவுள்ள மலைக்காடுகளை சுற்றுச் சூழல் பாதுகாப்பு கல்வித் தளமாக மாற்றி விட்டார். அங்கு வசிக்கும் விவசாயிகள், குப்பைகளைப் பகுதி பகுதியாக பிரித்து கையாண்டு, சூரிய ஆற்றலை பயன்படுத்தி ஒளி பெற்று மாசுபடுத்தாத பயிர்களை வளர்க்கின்றனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் உற்பத்தி முறையினால், இங்கே வருகை தரும் நகரவாசிகள் இயற்கையுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதோடு, பலவேறு முறைகளில் சுற்று சூழல் பாதுகாப்பு கல்வியையும் பெறுகின்றனர். மலை, காடு, ஆறு முதலியவற்றையும் சுமார் 40 விவசாயிகளின் குடும்பங்களையும் கொண்ட இந்தச் சிற்றூர், பசுமைச் சுற்றுலாவையும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக் கல்வி பயிற்சியையும் கொண்டுள்ள உயிரினச் சுற்றுலா வட்டாரமாக மாறியுள்ளது.

பெய்ஜிங் பூகோள கிராமம் தோன்றி, 9 ஆண்டுகள் கடந்த விட்டன. துவக்கத்தில் இரண்டு அல்லது மூன்று பணியாளர்கள் இருந்த நிலைமாறி, இப்போது, 15 பணியாளர்களையும் ஆயிரத்துக்கும் கூடுதலான தொண்டர்களையும் கொண்ட அமைப்பாக மாறி விட்டது. கருத்து ஆய்வு, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படம் தயாரிப்பு, குடியிருப்பு பிரதேச கல்வி, சர்வதேச தொடர்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆற்றல் உடைய சீன சிவில் அமைப்பான, பெய்ஜிங் பூகோள கிராமத்தின் பணி, சர்வதேச சமூகம் மற்றும் செய்தி ஊடங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2000மாவது ஆண்டில், சோபிஃ என்னும் சர்வதேச சுற்று சூழல் பரிசை லியேள சியேள யீ பெற்றார். சிவில் சுற்று சூழல் பாதுகாப்பு வீரரான அவருக்கு, சீன அரசு பசுமை பண்பாட்டுத் தூதர் என்ற விருதை வழங்கியது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்களுக்கான ஏற்பாட்டுக் கமிட்டி, அவரை சுற்றுச் சூழல் ஆலோசகராக பதவி ஏற்கும் படி அழைத்துள்ளது.

1  2