• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-15 08:18:43    
கிழக்காசிய உச்சி மாநாட்டின் உருவாக்க தோற்றம்

cri
முதலாவது கிழக்காசிய உச்சி மாநாடு டிசெம்பர் திங்கள் 14ம் நாள் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. தொடர்புடைய நாடுகள் உரையாடல் நடத்துவதற்கும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் புதிய மன்றத்தை இது ஏற்படுத்தியுள்ளது. கிழக்காசிய ஒத்துழைப்பு வளர்ச்சியில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை இந்த உச்சி மாநாடு கோடிட்டுக் காட்டுகின்றது.
ஆசியானின் 10 நாடுகளும், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளும் இதில் பங்கெடுத்துள்ளன. மாநாட்டில் கலந்து கொள்கின்ற 16 நாடுகளின் மக்கள் தொகை 300 கோடியை தாண்டி உலக மக்கள் தொகையில் 50 விழுக்காடாக இருப்பதால் இந்த உச்சி மாநாடு இன்றைய உலக முன்னேற்ற வளர்ச்சியில் மிக முக்கிய நிகழ்ச்சியாகும் ஆசியாவின் வளர்ச்சிக்கு இது முக்கிய அறிக்குறியாக திகழ்கின்றது. கிழக்காசிய வட்டாரத்தின் வர்த்தகம் பொருளாதாரம் பாதுகாப்பு ஆகியவை நிறைந்த முக்கிய மாநாடாக இது அழைக்கப்படுகின்றது.
1997ம் ஆண்டில் ஆசிய நிதி நெருக்கடிக்கு ஏற்பட்ட பின் வட்டார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பல்வேறு கிழக்காசிய நாடுகள் புரிந்து கொண்டன. அதற்கு பின் ஆசியானின் பத்து நாடுகள் சீனா, ஜப்பான் தென் கொரியா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. தலைவர்கள் கூட்டம், அமைச்சர்கள் சந்திப்பு, மற்றும் உயர் நிலை அதிகாரிகளின் கலந்தாய்வு போன்ற பரஸ்பர தொடர்பு வடிவம் உருவாயிற்று. பல தரப்பு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு கட்டமைப்பு முறை பல ஆண்டுகளின் பயிற்சி மூலம் அனுபவங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
1  2