• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-15 08:18:43    
கிழக்காசிய உச்சி மாநாட்டின் உருவாக்க தோற்றம்

cri
கடைசியில் கடந்த ஆண்டின் நவெம்பர் திங்கள் லாவோஸ் தலைநகர் வியநிதியானில் 10 ஆசியான் நாடுகள் மற்றும் சீனா, ஜப்பான், தென் கொரியா உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாடுகள் முதலாவது கிழக்காசிய உச்சி மாநாடு நடத்துவதெனத் தீர்மானித்தன.
கிழச்காசிய உச்சி மாநாடு என்ற கண்ணோட்டம் உறுதிப்படுத்தப்பட்ட பின் வட்டாரத்து அப்பாலுள்ள பல நாடுகளின் அக்கறையை ஈர்த்தது. அத்துடன் இதில் கலந்து கொள்ளும் விருப்பத்தை அவை அடுத்தடுத்து தெரிவித்தன. ரஷியாவும் அமெரிக்காவும் முதலாவது உச்சிமாநாட்டில் மிகவும் ஆர்வத்தை காட்டின. ஆனால் கடைசியில் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனுமதி அவற்றுக்கு வழங்கப்பட வில்லை. ஏனென்றால் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கு 3 நிபந்தனைகள் உள்ளன. ஆசியானுடன் உருப்படியான தொடர்பு உருவாக்க வேண்டும். ஆசியானின் உரையாடல் கூட்டாளியாக இருக்க வேண்டும். "தென்கிழக்காசிய நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்"கையொப்பிட்ட நாடு இருக்க வேண்டும் என்பன மேற்கூறிய முன்நிபந்தனைகளாகும். இந்த ஒப்பந்தம் 1976ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 24ம் நாள் இந்தோநேசியாவில் முதலாவது ஆசியான் உச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகள் ஆயுத மூலம் சர்ச்சையை தீர்ப்பதை தடுப்பது என்பது இன்த ஒப்பந்பதத்தின் நோக்கமாகும். தற்போது சீனா ஜப்பான் தென்கொரியா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்தியாவும் நியுசிலாந்தும் நடப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்றன. இவ்வாண்டில் அவையும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. கிழக்காசிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் ஆஸ்திரேலியா கடந்த அக்டோபர் திங்களில் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. ஆகவே இப்போது கிழக்காசிய உச்சி மாநாட்டில் 16 நாடுகள் கலந்து கொள்ளும் நிலைமை உருவாயிற்று.
இந்த மாநாட்டில் 16 நாடுகளின் தலைவர்கள் அரசியல், பொருளாதாரம், சமூக பிரச்சினை, வட்டார ஒத்துழைப்பு போன்ற பொது அக்கறை வாய்ந்த பிரச்சினைகள் பற்றி விவாதித்து கருத்துக்களை பரிமாறி கொண்டனர். அத்துடன் அவர்கள் "கோலாலம்பூர் பிரகடனத்தையும்"வெளியிட்டனர்.
கிழக்காசிய பிரதேசத்தின் மிக பெரிய நாடான சீனா ஆசியான் வட்டார ஒத்துழைப்பில் முக்கிய தலைமைப் பங்காற்ற வேண்டும் என்று கருதுகின்றது. 10 பிளஸ் 3 என்ற கட்டுக்கோப்பை மையமாக கொண்ட கிழக்காசிய ஒத்துழைப்பில் நின்று இந்த உச்சிமாநாடு கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான ஒற்றுமை, ஒத்துழைப்பு முன்னேற்றம், உலகின் மற்ற வட்டாரங்களுடனான கூட்டு வளர்ச்சி ஆகியவற்றுக்குத் துணை புரிய வேண்டும் என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வியந்தியன் உயர் நிலை கூட்டங்களில் சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் 10 பிளஸ் 3 குறித்து பேசுகையில் கிழக்காசிய ஒத்துழைப்பு பற்றி வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்துவது, காலோடி முன்னேற்றத்தை தூண்டுவது, ஆசியானில் தலைமைப் பங்கு வகிப்பது இதன் மூலம் ஆற்றலை ஒன்று திரட்டுவது, வெளிப்படையாக தெளிவுபடுத்துவது உள்ளிட்ட் 5 அடிப்படை கோட்பாட்டை முன்வைத்தார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய பகுதித் தலைவர் ஸவெய் தியன் கைய் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரைநிகழ்த்துகையில் முதலாவது கிழக்காசிய உச்சி மாநாட்டுக்கு சீனா வெளிப்படையான ஆக்கப்பூர்வமான மனப்பான்மை கொண்டுள்ளது என்றார். இதன் மீது நம்பிக்கை சீனா கொண்டுள்ளது என்றார் அவர்.
1  2