• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-05 10:04:06    
தைய்சான் மலையில் சுற்றுலாவும் கம்பியுசியஸும்

cri

கிழக்கு சீனாவின் சான்துங் மாநிலத்தில் சுற்றுல்லாத் தலமொன்று உள்ளது. அதன் துவக்கம் சான்துங் மாநிலத்தின் தைய்அன் நகரில் அமைந்துள்ள தைய்சான் மலையாகும். தைய்சான் மலையின் முக்கிய சிகரமான யுஹுவாங்திங் சிகரத்தின் உயரம், கடல் மட்டத்திலிருந்து 1545 மீட்டர். சீன வரலாற்றில் 72 ஆட்சியாளர்கள் தைய்சான் மலைக்குச் சென்று மூதாதையருக்கு வழிபாடு செய்தனர். 1987ஆம் ஆண்டு, தைசான் மலையை யுனெஸ்கோவால் உலக இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச்செல்வங்களின் பட்டியலில் சேர்த்தது. இயற்கை காட்சியும் மனித சமுதாயக் காட்சியும் உரிய முறையில் இணைந்திருப்பதால தைய்சான் மலை புகழ் பெற்றுள்ளது என்று ஜப்பானிய பயணி யாசிமா ஹநாகி கூறினார். அவர் கூறியதாவது, தைய்சான் மலையை சீனாவின் முதலாவது பிரபல மலை என்று கூறுவது மிகையாகாது. இங்கு வருவதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தைய்சான் மலை, சீனத் தேசத்தின் மரபுச் செல்வம். வரலாறு இதுவரை நீடிப்பதற்கு ஒரு பாலமாக அது திகழ்கின்றது. தைய்சான் மலை செவ்வனே பாதுகாக்கப்படுவ தைக் கண்டு வெளிநாட்டவர்களாகிய எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அது வரலாற்றின் சின்னம் என்றார்.

தைய்சான் மலையில் மலையின் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல கல் பாதை ஒன்று குறுக்குவழியாக உள்ளது. இதில் மொத்தம் 7000க்கும் அதிகமான படிக்கட்டுகள் உள்ளன. இந்த வழியில் மலை ஏறினால், வழியில் ஆபத்து எதுவும் அதிகமில்லை என்ற போதிலும், நடந்து செல்வது மிகவும் கடினம். குறிப்பாக, நன்தியென்மன் செல்லும் வழியில் ஒரு பகுதி மிகவும் செங்குத்தானது. இருப்பினும், தைய்சான் மலையில் நடந்தே ஏறுவோரில் முதியோர் பலர் உள்ளனர். தைய்சான் மலையில் ஏறுவதைத் தங்களது வாழ்வில் ஓர் அருஞ்சாதனை என சீன மக்கள் பலர் கருதுகின்றனர். இம்மலையில் நடந்து ஏறி, மலை உச்சியை அடைவது இந்த முதியோர்களுக்கு மனநிறைவு தரும். மலை உச்சி சென்றடைந்த முதியோர் வாங்தியெலின் எமது செய்தியாளரிடம் பேசுகையில், இம்முறை மீண்டும் மலை ஏறியிருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்றார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, தைய்சான் மலையில் ஏறினேன். அப்பொழுது நான் மிகவும் இளைஞனாக இருந்தேன்.மலையின் நடுப்பகுதியிலுள்ள சாங்தியெமனிலிருந்து புறப்பட்டு, மலை உச்சியை நோக்கி நடந்துசென்றேன். அப்பொழுது கம்பி வழி இல்லை. நானே நடந்து மலை உச்சியை அடைந்தேன். இப்போது இருப்பது போல முன்பு பாதை அகலமில்லை. மிகவும் ஒடுக்கமானது. படிக்கட்டுகளும் கரடுமுரடானது. நடப்பது கடினம் என்றார்.

1  2