• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-05 10:04:06    
தைய்சான் மலையில் சுற்றுலாவும் கம்பியுசியஸும்

cri

களைப்பு இல்லை என்று முதியவர் சொன்னாலும், அவர் அவசரமாக மூச்சு விடுவதிலிருந்தே அவருக்கு மிகவும் களைப்பு என்பது தெரிகிறது. மலை உச்சியில் ஓய்வு எடுத்தால் களைப்பு நீங்கிவிடும். இம்மலை உச்சியின் பரப்பளவு பெரியது. இவ்விடத்தில் தெரு சந்தை, ஹோட்டல் முதலியவை உள்ளன. இந்த தெரு சந்தைக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. அதன் பெயர், வான தெரு. இந்தத் தெருவில், சிறிய மற்றும் பெரிய கடைகள் பண்டைக் காலக் கட்டடப் பாணியில் கட்டப்பட்டுள்ளன. அவை தனிச்சிறப்பு வாய்ந்தவை. பொதுவாக, பயணிகள் அயராது மலை உச்சியில் ஏறிய பின்னர், அங்கு ஒரு நாள் இரவு தங்கியிருந்து, மறு நாள் சூரியன் உதிப்பதைக் கண்டுகளிப்பது வழக்கம். சில பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் வான் தெருவில் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். இதனால் இந்த வான் தெருவின் சிற்றுண்டிக் கடைகளில் இரவு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. இத்தெருவில் சான்துங் மாநிலத்தின் பாரம்பரிய சிற்றுண்டி விற்பனையாகும் கடைக்கு முன்வாசலில், 2 அயர்லாந்து பயணிகள் ரொட்டியைச் சுவைத்துக்கொண்டிருந்தனர். இவர்களில் ஒரு பெண்மணி எமது செய்தியாளரிடம் கூறியதாவது, நான் சீனாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை. தைய்சான் மலை எழில் மக்கது. மகத்தானது என்றார்.

உண்மையிலே சீன மக்கள் வெகு காலத்துக்கு முன்பே, தைய்சான் மலையைப் பாராட்டத் துவங்கினர். இம்முறை சான்துங் மாநிலத்தில் பயணத்தின் அடுத்த இடம் கம்பியுஸியஸின் பிறந்த ஊரான சியுவு நகரம். இந்நகரம் சான்துங் மாநிலத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தைய்அனிலிருந்து புறப்பட்டு, பேருந்தில் 2 மணி நேரம் பயணம் செய்தால், சியுவு நகரம் வந்துவிடும். கி.மு 6ஆம் நூற்றாண்டுக்கு முன் பிறந்த கம்பியுஸியஸ், புகழ்பெற்ற சிந்தனைவாதியாளர். அது மட்டுமல்ல, அரசியல்வாதியும் கல்வியலாளரும் ஆவார். சீனத் தேசத்தின் குணம், இயல்பு ஆகியவற்றுக்கு அவர் முக்கிய செல்வாக்கை ஏற்படுத்திருந்தார்.


1  2