• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-29 18:29:01    
பட்டுப் பாதையில் சுற்றுலா

cri

பட்டுப் பாதையில் சுற்றுலா, வெளிநாட்டுப் பயணிகளால் பெரிதும் வரவேற்கப்படும் சுற்றுலா நிகழ்ச்சியாகும். பட்டுப்பாதை, பண்டைக் காலத்தில் ஆசியாவுக்கு ஊடாகச் சென்று, ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டத்தை இணைத்திருக்கும் புகழ் பெற்ற தரை வணிகப் பாதையாகத் திகழ்ந்தது. அது சுமார் ஈராயிரம் ஆண்டு வரலாறுடையது.

பட்டுப் பாதை, கிழக்கில் ஷெங்சி மாநிலத்தில் பழம் பெருமை வாய்ந்த சிஆனிலிருந்து தொடங்கி, வழியில் சீனாவின் ஷெங்சி, கான்சு, நின்சியா, சிங்ஹைய் ஆகிய மாநிலங்கள் மற்றும் சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துக்கும் தற்போதைய சுதந்திர நாடுகள் கூட்டு அமைப்பு, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா ஆகியவற்றுக்கும் ஊடாகச் சென்று, மத்திய தரைக் கடலின் கிழக்கு கரையோரம் அடைந்தது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டுத்துணி, அங்கிருந்து ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டது.

பட்டுப்பாதையின் முழு நீளம், 7000க்கும் அதிகமான கிலோமீட்டர். சீனாவிலான அதன் நீளம் முழு நீளத்தில் 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. தற்போது பட்டுப் பாதை அதன் வணிக வர்த்தகச் செயல்பாடு வெகு காலத்துக்கு முன்பே இழந்துவிட்டது. இருப்பினும், இப்பட்டுப் பாதை நெடுகிலும் தேசிய இனப் பாணியுடன் கூடிய நகரங்களும் அழகான இயற்கை காட்சித் தலங்களும் அதிகமான வரலாற்றுப் பண்பாட்டு மரபுச்சிதிலங்களும் உள்ளன.

இதனால், இப்பட்டுப் பாதை, பயணிகள் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் முக்கிய நெறியாக மாறியுள்ளது. சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உருமுச்சி நகரம், பட்டுப் பாதையில் சுற்றுலா மேற்கொள்வதற்கு இன்றையமையாத இடம். வறுத்தல் ஆட்டிறைச்சி, நறு மணம் வீசும் சோறு ஆகியவை விற்கப்படும் தெருவில் பயணிகள் நடந்துசெல்லும் போது, பூக்கள் தைக்கப்பட்ட தொப்பி அணிந்த உய்கூர் இன முதியோரையும் தலையில் மெல்லிய பட்டுத் துணி அணிந்துகொண்ட இளம் உய்கூர் இன மகளிரையும் சந்திக்கும் அதே வேளையில், மத்திய ஆசிய மற்றும் மேற்காசிய வணிகர்கள் பொருளை விற்கும் போது கூச்சலிடும் சத்தம் தெரு சந்தையிலிருந்து காதில் விழும். இந்நிலைமையில், பண்டைக் காலப் பட்டுப் பாதையின் தெரு சந்தையில் இருப்பது போன்ற உணர்வு பயணிகளுக்கு ஏற்படும்.

1  2