• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-29 18:29:01    
பட்டுப் பாதையில் சுற்றுலா

cri

 

பட்டுப் பாதை பற்றி பெய்ச்சிங் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையின் மேற்படிப்பு மாணவி நியுதியென்தியென் கூறியதாவது, இப்பட்டுப் பாதையில் பல என் மனதில் ஆழப்பதிந்துள்ளன. இவற்றில் ஒன்று, சிங்ஜியாங்கின் தெரு சந்தையில் நடந்துசெல்வது. தெரு சந்தை, சிங்ஜியாங்கில் பாசா என்று அழைக்கப்படுகின்றது. தெரு சந்தை நடைபெறும் போதெல்லாம் அங்குள்ள ஆண்களும் பெண்களும் முதியோரும் குழந்தைகளும் தலை சிறந்த ஆடைகளையும் அழகான நகையையும் அணிவர். முஸ்லிம் பெண்மணிகள் முகம் மூடும் லேசான பட்டுத் தணியை அணிவர். பயணிகள் பாசாவில் தாம் விரும்பியவாறு நடந்துசெல்லலாம். உணவுப்பொருள் சந்தையில் உய்கூர் இன மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்றுண்டியை உண்ணலாம். கண்களைக் கவரும் பட்டுத் துணிகள் அதிக அளவில் உள்ளன என்றார்.

அடுத்து சுற்றுலா பற்றிய தகவலகளை வழங்குகின்றோம். விண்வெளி ஹோட்டல் உலகில் முதலாவது விண்வெளி ஹோட்டலைத் தொடங்கப் போவதாக அமெரிக்காவின் மது விற்பனை துறைப் பணக்காரர் ருபத் பிக்ரு தெரிவித்துள்ளார். இந்த ஹோட்டலை அமைப்பதற்குத் தாம் 50 கோடி அமெரிக்க டாலரைச் செலவழிக்கவும், 2010ஆம் ஆண்டு இதை விண்வெளிக்கு அனுப்பவும் அவர் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த விண்வெளி ஹொட்டலின் அறை வாடகை, ஒரு நாளுக்கு ஒருவருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும் என்று தெரியவருகின்றது. விண்வெளிப் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு பயணியின் செலவு, விண்வெளி கலம் மூலம் அங்கு செல்வதற்குத் தேவைப்படும் போக்குவரத்துச் செலவு, ஹொட்டலில் தங்குவதற்குச் செலவிடப்படும் கட்டணம், இதர பல்வகை செலவுகள் ஆக சுமார் 79 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும். அமெரிக்க மற்றும் தென்னாப்பிரிக்க பணக்காரர்கள் முன்வைத்த விண்வெளிப் பயணத்துக்கு ஒருவருக்கு 2 கோடி அமரிக்க டாலர் என்ற விலையுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் மலிவு என்று கூறலாம்.


1  2