• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-12 17:00:15    
பட்டுப் பாதையில் இயற்கை காட்சி

cri

 

சிறுபான்மை தேசிய இனங்களின் பழக்க வழக்கங்கள் பற்றி அறிமுகப்படுத்தியதை அடுத்து, பட்டுப்பாதையில் இயற்கை காட்சி பற்றி கூறுகிறோம். பட்டுப்பாதை நெடுகிலும் எழில் மிக்க இயற்கை காட்சி கண்களுக்கு விருந்து அளிக்கும். பயணிகள் தங்களது பயண நேரத்திற்கேற்ப, சுற்றுலா நெறியைத் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, சிங்ஹைய் மாநிலத்தில் அமைந்துள்ள உப்பு ஏரி, சிங்ஹைய் ஏரியிலுள்ள பறவைத் தீவு, சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் பாயிங்புருக் புல்வெளியில் அமைந்துள்ள அன்னப் பறவை இயற்கைப் பாதுகாப்பு மண்டலம், தியென்சான் மலையின் ஆழமான இடத்தில் அமைந்துள்ள தியென்ச்சி, துருபாவில் தீ மலை முதலிய இடங்கள் பார்வையிடத் தக்கவை. பட்டுப் பாதையில் சுற்றுலா, வெளிநாட்டுப் பயணிகளால் பெரிதும் வரவேற்கப்படும் சுற்றுலா நிகழ்ச்சியாகும். பட்டுப்பாதை, பண்டைக் காலத்தில் ஆசியாவுக்கு ஊடாகச் சென்று, ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டத்தை இணைத்திருக்கும் புகழ் பெற்ற தரை வணிகப் பாதையாகத் திகழ்ந்தது. அது சுமார் ஈராயிரம் ஆண்டு வரலாறுடையது. குவுசூ ஆற்றுப் பள்ளத்தாக்கு, இந்தப் பட்டுப் பாதையில் தனிச்சிறப்புக் காட்சியுடைய இடம்.

அது சிங்ஜியாங்கின் தென் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக் காலப் பட்டுப்பாதையில் முக்கிய நகரமாகவும் அது திகழ்ந்தது. வழிகாட்டி லீ வன்சியுன் கூறியதாவது, குவுசூ ஆற்றுப் பள்ளத்தாக்கில் பல மரபுச்சிதிலங்களும் குகைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, குவுசூ மாவட்டத்தின் தென் கிழக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள Gobi பாலை வனத்தில் தாகுசன், இம்மாவட்ட நகரத்தின் வடக் கிழக்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆயிரம் புத்தர் குகை, இம்மாவட்டத்தின் மேற்கிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் வுன்ஹொ சுரங்க வழியின் மரபுச்சிதிலம் முதலியவை குறிப்பிடத் தக்கவை. பண்டைக்காலப் பட்டுப்பாதையிலான தொன்மை வாய்ந்த நாகரிக மரபுச்சிதிலங்கள் பல உள்ளன என்றார்.

1  2