• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-12 17:00:15    
பட்டுப் பாதையில் இயற்கை காட்சி

cri

வழிகாட்டி லீ வன்சியுன் கூறியது போல, செழுமை வாய்ந்த மனிதப் பண்பாட்டு மற்றும் மனிதச் சமுதாயக் காட்சி, பட்டுப் பாதையில் சுற்றுலாவுக்கு ஒரு தனிச்சிறப்பு. பண்டைக் காலப் பட்டுப்பாதையில் சுமார் ஆயிரம் ஆண்டு வரலாறுடைய கல் குகை, பழம் பெருமை வாய்ந்த நகரம், கோயில்களின் மரபுச்சிதிலம் உள்ளிட்ட தொன்மை வாய்ந்த நாகரிக மரபுச்சிதிலங்கள் பல உள்ளன. பண்டைக் காலப் பட்டுப்பாதை, பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா நெறியாகும். கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளில், ஜப்பானிய பயணிகளின் கோரிக்கைக்கிணங்க, சீனச் சர்வதேச சுற்றுலாப் பணியகம் இப்பட்டுப் பாதையைச் சுற்றுலா பாதை என்ற முறையில் பயணிகளுக்குத் திறந்துவைத்துள்ளது.

அப்பொழுது முதல், இப்பட்டுப் பாதையில் சுற்றுலா மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. ஜப்பானிய பயணிகள் தவிர, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பயணிகளும் இப்பட்டுப் பாதையில் சுற்றுலா மேற்கொள்ள கோரியுள்ளனர். சீனச் சர்வதேச சுற்றுலாப் பணியகத்தின் மேலாளர் ஜிசியௌபு கூறியதாவது, மேன்மேலும் அதிகமான பயணிகள் இப்பட்டுப்பாதையில் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகின்றனர். இப்பட்டுப்பாதையிலான சுற்றுலா நிகழ்ச்சிகள் பலவிதமானவை இதற்குக் காரணமாகும். அதாவது, சாதாரண சுற்றுலா நெறிகளை விட இப்பட்டுப் பாதையில் சுற்றுலா, அதிக மகிழ்ச்சி தரும். பயணிகளின் வாழ்வில் மறக்க முடியாத நினைவு ஏற்படும் என்றார்.


1  2