• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-27 20:41:31    
காதலைக் கட்டுப்படுத்துவது இதயமா?மூளையர்?

cri
காதலிக்காமல் இருப்பதைவிட, காதலித்து காதல் தோல்வி கண்டு, முதல் காதலையே நினைத்து நினைத்து உருகுவதும், கண்ணீர் வடிப்பதும் எவ்வளவோ சுகமானது என்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா?சட்டையை மாற்றுவது போல காதலிகளையும் ஏன் மனைவியையும் மாற்றும் மனிதர்களை நாம் பார்க்கிறோம் இல்லையா?

ஆனால் பெருச்சாளிகள் அப்படியல்ல, PRIARIE VOLES என்ற இனத்தைச் சேர்ந்த பெருச்சாளிகளில் ஆண் பெருச்சாளிக்கு ஏகபத்தினிவிரதம் என்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் க்டுபிடித்துள்ளனர். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று இந்த ஆண் பெருச்சாளி செல்வரம் தந்துவிடுகிறதாம். அது மட்டுமல்ல, இன்னொரு பெண் பெருச்சாளி யக்கும் பார்வையை வீசினால், ரூர்ப்பனகை மூக்கை இராமன் அறுத்தது போல, பாய்ந்து தாக்கி விரட்டிவிடுகிறதாம். ஆனால் ஒரு நிபந்தனை, தனது காதலியுடன் ஒருமுறையாவது உடலுறவு கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்காவின் புளோரிடா அரசுப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த PRIARIE VOLES இனப் பெருச்சாளிகளின் காதல் விவகாரத்தை விரிவாக ஆராய்ந்தார்கள். இந்த ஆண் பெருச்சாளி, பெண் பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளும் போது, Dopamine என்ற ஒரு ரசாயனப்பொருள் அதனுடைய முளைக்குள் பெருமளவில் சுரகாகிறதாம். இந்த ரசாயனப் பொருள் தான் ஆயுள் முழுவதும் அழியாத காதல் பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறதாம்.

1  2