• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-27 20:41:31    
காதலைக் கட்டுப்படுத்துவது இதயமா?மூளையர்?

cri

இது உண்மைதான் என்று நிரூபிக்க முற்பட்டார் ஆய்வாளர் குழுவின் தலைவர் BRANDON ARAGONA, அவர் இந்த Dopamine ரசாயனப்பொருளை பெண்பெருச்சாளியுடன் உடலுறவு கொள்ளாத ஒரு பெண் பெருச்சாளியுன் உடம்பில் ஊசி மூலம் செலுத்தினார். அதன் பிறகு இந்த ஆண் பெருச்சாளிக்கு பெண்வாசனையே பிடிக்காமல் போய்விட்டது. பெண்பெருச்சாளிகளைக் கண்டால் ஓடி ஒதுங்க ஆரம்பித்தது.

இது ஏதனால்?இந்த Dopamine ரசாயனப்பொருள், பெருச்சாளியின் மூளையில் உள்ள nucleus accumbens என்ற பகுதியை மாற்றியமைத்து விடுவிதது. இந்த மாற்றம் சாதாரண மாற்றமல்ல. அதிரடி மாற்றம். எப்படி என்றால், காதல் ஜோடியைப்பிரித்து, ஆண் பெருச்சாளிக்கு முன்னால் இன்னொரு பெண் பெருச்சாளியை நிறுத்திய போது, அதைக் கண்டதுமே ஆண் பெருச்சாளியின் மூளையில் Dopamine சுரந்தது. ஆனால், அது வேறு நரம்புச் சுற்று வழியாகத் திசைமாறிச் சென்று விட்டது. இதன் விளைவாக, புதிய பெண்ணை ஆண்பெருச்சாளி அலட்சியப்படுத்தி விட்டது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் Nature Neuroscience என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சரி, மனிதர்களுக்கும் இப்படிப்பட்ட Dopamine ரசாயனப்பொருள் சுரக்குமானால், கற்பழிப்புக் குற்றங்களை இல்லாமல் போகுமல்லாவா?இதைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார் BRANDON ARAGONA. பெருச்சாளி போலத்தான் மனிதர்களுக்கும் மூளை அமைப்பு இருக்கிறதாம். ஆனால், ஒரேஒரு வித்தியாசம், மனித மூளைமாகப்பெரியது. அது, வெவ்வேறு நெருக்குதல்களுடன் இயங்குகிறது. அதனால் தான் காதலியைக் கைவிடுவது, மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணத்தில் மயங்குவது என்பது போன்ற சமூகக் கற்றங்கள் அதிகரிக்கின்றன.


1  2