
வட சீனாவின் விசாலமான உள்மங்கோலிய புல்வெளியில், முக்கியமாக நாடோடி வாழ்க்கை நடத்தும் மங்கோலிய இன மக்கள் வசிக்கின்றனர். நீல வான், வெள்ளை மேகம், கண்கொள்ளாத விரிவான புல்வெளி ஆகியவற்றுடன், மங்கோலிய கூடாரம் வெள்ளை வெள்ளேன்று காட்சியளிக்கின்றது. வெள்ளை நிற ஆடுகள் முத்துக்கள் போல் இங்கும் அங்குமாக சிதறி மேய்க்கின்றன. இது, மங்கோலிய இன ஆயர்களின் வாழ்க்கையே. இது மட்டுமின்றி, இவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் மத நம்பிக்கையிலும் வெள்ளை நிறம் நிறைய காணப்படுகின்றது. மங்கோலிய இனம் வெள்ளை நிறத்தின் மீது கொண்டுள்ள பற்று குறித்து தங்களுக்கு விளக்குகிறோம்.
மங்கோலிய இனம், வெள்ளை நிறத்தை விரும்புவது எதனால்? வாழ்க்கை சூழலுடன் மட்டுமல்ல, மத நம்பிக்கை, அவர்களுடைய இனத்தின் கதை ஆகியவற்றுடனும் வெள்ளை நிறம் தொடர்புடையது. மங்கோலிய இன மக்கள் பெரிதும் வட சீனாவின் விசாலமான புல்வெளியில் வசிக்கின்றனர். அங்கு, குளிர்காலத்தில் கடும் குளிர். இந்த நீண்ட பருவத்தில் எங்கும் பார்த்தாலும், ஒரே வெள்ளை நிற உறை பனி தென்படுகின்றது. மங்கோலிய இனத்தின் முன்னோடியான மதிப்புமிக்க வான் கடவுளின் அடையாளமாக மங்கோலிய இன மக்கள் வெள்ளை நிறத்தின் மீது பற்றுக் கொள்கின்றனர். மங்கோலிய இன மக்களிடையே, இவ்வினத்தின் முன்னோடியின் பிறப்பு பற்றிய கதை ஒன்று உள்ளது. மங்கோலிய இன இளம்பெண் சலெனா இந்தக் கதையை பற்றி கூறியதாவது:
"எங்கள் மங்கோலிய இனத்தின் முதலாவது எழுத்துக்களுடைய வரலாற்று நூலில், பண்டைக்கால கதை ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. வானில் பிறந்த ஓநாய், வெள்ளை மான் ஆகியவற்றில் இருந்து தோனியது மங்கோலிய இனம் என்று இக்கதை கூறுகின்றது. எனவே, தங்களை ஓநாய்-வெள்ளை மானின் தலைமுறை என மங்கோலிய இன மக்கள் கருதுகின்றனர்" என்றார்.
1 2 3
|