
இதர நிறங்களை விட, வெள்ளை நிறம், மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்றது. தவிர, வெள்ளை நிறமானது, மக்களுக்கு தூய்மை, ஒளி, நேர்மை முதலியவற்றை தருகின்றது. சீன சமூக அறிவியல் கழகத்தின் தேசிய இன ஆய்வகத்தின் பேராசிரியர் He Xing Liang விளக்கம் கொடுத்துக்கூறியதாவது:
"பண்பாட்டின் கோணத்தில் பார்க்கும் போது, சில பழக்க வழக்கங்கள் தேசிய இனப் பண்பாட்டின் மீது தாக்கம் செலுத்துகின்றன. இது, மங்கோலிய இனத்தவர் பற்றுக்கொண்டுள்ள நிறத்துடன் தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, மாட்டுப்பால், ஆட்டுப்பால், கம்பளித்துணிக் கூடாரம் ஆகியவையும் வெள்ளை நிறமே." என்றார்.
நிற பழக்கவழக்கங்கள், தேசிய இன மக்களின் குணாம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையன என்று பேராசிரியர் He சொன்னார். தலைமுறை தலைமுறையாக, மங்கோலிய இன மக்கள் புல்வெளியில் வாழ்ந்து வருகின்றனர். நீண்டகாலமாக நீரும் புல்லும் இருக்கும் இடத்தில் நாடோடி வாழ்க்கை நடத்துவதில், அவர்கள், உற்சாகம், திறந்த மனம் என்ற குணாம்சமுடையவர்களாகியுள்ளனர். அமைதியும் தூய்மையும் படைத்த இவ்வெள்ளை நிறம், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றது என்பதால், மங்கோலிய இன மக்கள் வெள்ளை நிறத்தை நேசிக்கின்றனர்.
வெள்ளை நிறத்தின் மீதான அவர்களின் பற்றி, அன்றாட வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றது. எடுத்துக்காட்டாக, கடவுளை வணங்கும் போது, விருந்தினரை வரவேற்கும் போதும், வெள்ளை வெள்ளேர் என்ற பட்டுத் துணியை அன்பளிப்பு செய்வர். வெள்ளை கோப்பையில் வெள்ளை நிற குதிரை பாலை விருந்தினர்களுக்கு பருகத்தருகின்றனர். மங்கோலிய இனத்தவர்கள், வெள்ளை நிற குதிரைகள், வெள்ளை நிற ஓட்டகங்கள் மீது தனித்தன்மை வாய்ந்த அன்பு காட்டுகின்றனர். இவ்விலங்குகளை குடும்பத்துக்கு நல்ல வாய்ப்பினையும் சொத்துக்களையும் ஏற்படுத்தக்கூடிய மங்களமாக கருதுகின்றனர்.
1 2 3
|