• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-11 12:49:04    
ஷான் சி மாநிலத்தில் குகை வீட்டு கலை

cri

ஏன் ஆன் நகராட்சியும் குகை வீடு வாழ்க்கையை மையமாகக்கொண்ட சுற்றுலாத் தளங்களை நடத்தி, வெளி உலகத்துக்கு குகை வீட்டின் அற்புதத்தையும் காட்டுகின்றது. யாங் ச்சியா லிங் எனும் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஏன் ஆன் குகை ஹோட்டல் உலகில் மிகப் பெரிய குகை வீடுகளைக் கொண்ட ஹோட்டலாகும். ஆண்டுதோன்றும் அதிகப் பயணிகளை ஈர்த்துள்ளது. மொத்தம், 8 வரிசைகளில் சுமார் 300 குகைகள் இதில் உள்ளன. விவசாயி கைகளால் வரையும் ஓவியங்கள் சுவரில் தொங்கவிடப்பட்டன. ஜன்னல்களில் தாள் கத்தரிப்புகள் பசையால் ஓட்டப்பட்டன. ஒவ்வொரு வரிசை குகைகளின் வாசலில் கல் உருளை, கல் மேசை கல் நாற்காலி ஆகியவை வைக்கப்பட்டன. விவசாயி குடும்பத்தின் தனிச்சிறப்பு மிக்கது. பயணிகளின் தேவைக்கேற்ப, சில குகைகளில் படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலவற்றில், பாரம்பரிய மண் படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஷாங்காய் பயணி சியு சாங் யுன் கூறியதாவது,

பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு இத்தகைய குகை வீடு பற்றி விவரம் ஒன்றும் தெரியாது. இது தேசிய இன தனிச்சிறப்பு மிக்கது. இந்த ஹோட்டலில் பல பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட்டன. இத்தகைய பாரம்பரிய குகை அறைகளில் வாழ்வது பரவாயில்லை என்றார் அவர்.

பல பயணிகள் இங்கே வந்து குகை வீடு வாழ்க்கையை அனுபவிப்பதோடு, பல உள்ளூர் விவசாயிகள் நகரவாசிகளின் வாழ்க்கை வடிவங்களைப் பின்பறி குகைகளிலிருந்து வெளியேற்றி, 2 மாடி வீடுகளில் குடியிருக்கினறனர். தற்போது, ஏன் ஆன் நகரில் புது வகைக் கட்டிடங்களும் குகை வீடுகளும் சேர்ந்து சிறப்பாகக் காட்சி அளிக்கின்றன.


1  2