• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-09 21:00:02    
பைத்தியமாக்கும் மூளைப்பருப்பு

cri

வில்லியமஸ் சிண்டரோம் என்னும் மனநல நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் 7 குரோமோசோமில் சுமார் 21 மரபணுக்களைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தப் பற்றாக்குறையால்தான், சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுவது என்று அவர்களால் தீர்மானிக்க முடியாமல் போகிறது. இப்படிப்பட்டவர்கள் முற்றிலும் புதிய மனிதர்களிடம் ஏதோ வெகு நாள் பழகியவர்கள் போல பேசத் தொடங்குவார்கள். அளவுக்கு அதிகமாக நட்பு பாராட்டுவார்கள். மிகவும் பயப்பட வேண்டிய தேவையே இல்லாத போது, பயந்து போய், பரபரப்பாக செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உயரத்தைக் கண்டால் பயம், சிலந்தியைக் கண்டால் பயம் என்று சின்னச் சின்ன விடியங்களுக்கு எல்லாம் பயப்படுவார்கள்.

இப்படிப்பட்ட விநோதமான பழக்கவழக்கங்களுக்கும், மூளையின் உள்ளே வாதுமைப்பருப்பு வடிவில் உள்ள ஒரு சிறு கட்டிக்கும் தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகித்தனர். இந்தச் சிறுபருப்பு போன்ற கட்டிதான் ஒரு தகவலைச் சரிபார்த்து, அந்த நேரத்தில் மனிதன் எப்படிச் செயல்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இந்த வாதுமைப் பருப்பு வடிவிலான மூளைக்கட்டிக்கு ஏதேனும் சேதம் ஏற்படும் போது, மனிதனுடைய சமூகப் பழக்கவழக்கங்கள் கெடுகின்றன. இதைத்தான் வில்லியமஸ் சிண்ட்ரோம் என்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களின் மூளையை, சாதாரண மனிதர்களின் மூளையுடன் ஸ்கேன் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்ததில், புதிதாக ஒரு கேள்வி எழுந்துள்ளது. இந்த வாதுமைப் பருப்பு வடிவிலான மூளைக் கட்டி தானாகவே சேதம் அடைகிறதா? அல்லது மூளையின் இதர பாகங்களை அது கட்டுப்படுத்தும் முறையினால் பிரச்சினை உண்டாகிறதா?

சாதாரண மனிதர்களின் மூளையில் வாதுமைப் பருப்பு வடிவிலான கட்டியை கட்டுப்படுத்தக்கூடிய நியூரான் எனப்படும் ஒரு சிக்கலான நரம்பியல் தொடரமைப்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், வில்லியம்ஸ் சிண்ட்ரோமினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நரம்பியல் தொடரமைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்டவர்களை குழந்தைப் பருவத்திலேயே மரபணு சோதனைக்கு உட்படுத்தி, அதற்கு ஏற்ப கல்வி கற்பித்தால் குணப்படுத்தி விட முடியும். பயப்பிராந்தி அல்லது குற்றச்செயல் போன்ற மன நோய்களுக்கு மக்களை தள்ளக்கூடிய மரபணுக்கள் யாவை என்பதை ஏதாவது ஒரு நாள் கண்டு பிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.


1  2