
ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் திங்களின் நடுப்பகுதியில், மஞ்சு இன மக்கள் "Ban Jin" என்ற சிறப்பு விழாவை வரவேற்கின்றனர். இவ்விழாவுக்கு முன்னும் பின்னும் சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள மஞ்சு இன மக்கள், ஒன்றுகூடுவது, பொருட்காட்சியை நடத்துவது, கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது முதலிய நடவடிக்கைகள் மூலம் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். சில நாட்களுக்கு முன், சீனாவின் தலைநகரான பெய்சிங்கில், மஞ்சு இன மக்கள் பலர், இணையத்தின் மூலம் சிறப்பு கூட்டம் நடத்தி விழாவைக் கொண்டாடினர். எமது செய்தியாளர், மஞ்சு இனத்தவர். எனவே, அவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இச்சிறப்பு இணைய தள நண்பர்களின் கூட்டத்தை நேரடியாக உணர்வோம்.
"மங்கள மஞ்சு இனம்" என்னும் இணையத்தளம் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இவ்விழாவுக்கு முந்திய நாளில், பெய்சிங் மாநகரத்தின் மையப்பகுதியிலுள்ள டின் அன் மென் சதுக்கத்தில் அவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர். அன்று ஆள்கூட்டம் திரளும் டின் அன் மென் சதுக்கத்தில் மஞ்சு இன ஆடைகளை அணியும் அவர்கள், மக்களின் கவனத்தை ஈர்த்தனர். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து இவ்விழாவில் பங்கெடுக்க வந்த மஞ்சு இன இணைய தள நண்பர்கள், "Qi Pao" என்னும் நீண்ட அங்கியும், முண்டா சட்டையும், அணிந்திருந்தனர். இவை மஞ்சு இனத்தின் பாரம்பரிய ஆடைகளாகும். சாதாரண நாட்களில் இந்த உடைகளை யாரும் அணிவதில்லை என்பதால், அன்றைய தினம் அனைவரின் கவனமும் இவர்களின் மீது திரும்பியது.
Ban Jin விழா, மஞ்சு இனத்தின் சிறப்பு விழாவாகும். அதன் தோற்றுவாய், மஞ்சு இனம் என்ற தேசிய இனத்தின் பெயர் எவ்வாறு உருவாயிற்று என்பதுடன் தொடர்புடையது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மஞ்சு இன இணையத் தள நண்பர் சு தோங் இது பற்றி கூறினார்.
"மஞ்சு இனம், உலகில் நிர்வாக கட்டளை மூலம் உருவெடுத்த ஒரே ஒரு தேசிய இனமாகும். 1635ம் ஆண்டு அக்டோபர் 13ந் நாள், அப்போதைய சிங் வம்ச அரசின் பேரரசர் கட்டளை பிறப்பித்த நாள் முதல், Nv Zhen என்னும் தேசிய இனம், மஞ்சு இனமாக பெயர் பெற்றது."
1 2 3
|