
அதற்குப் பின், மஞ்சு இன மக்கள், தமது இனப் பெயர் மாற்றப்பட்ட நாளை, Ban Jin விழா என கூறுகின்றனர். மஞ்சு இன மொழியில், Ban Jin என்பதற்கு, புத்துயிர் மலர்ச்சி என்ற பொருள். தேசிய இனம், வலிமையானது, நாடு வளமடைந்துள்ளது என்று இதற்குப் பொருள். இன்றைய சீனாவில் ஒருகோடிக்கும் அதிகமான மஞ்சு இன மக்கள் இருக்கின்றனர். ஹான் இனம், சுவாங் இனம் ஆகியவற்றை அடுத்து மஞ்சு இனம் சீனாவின் மூன்றாவது பெரிய தேசிய இனமாகும்.
சீன வரலாற்றில் கடைசி பிரபுத்துவ வம்சமான சிங் வம்சத்தை மஞ்சு இனம் நிறுவியது. சீனாவை ஆட்சி புரிந்த 200 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், கட்டிடக்கலை, இலக்கியம், ஓவியம், ஆடை, மொழி முதலியவற்றில் மஞ்சு இன மக்கள் தனித்தன்மை வாய்ந்த புத்தாக்கம் செய்துள்ளனர். ஏராளமான பண்பாட்டு மரபு செல்வங்களை அவர்கள் விட்டு விட்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இணைய தள நண்பர்கள் பெரும்பாலோர், இளைஞர்கள். அவர்கள் அனைவரும் மஞ்சு இன பண்பாட்டை நேசிக்கின்றனர். தவிரவும், இக்கூட்டத்தின் தலைப்பு, மஞ்சு இனப் பண்பாட்டின் பாதுகாப்பும் வளர்ச்சியும் என அவர்கள் கலந்தாய்வு மூலம் முடிவுக்கு வந்தனர். "மங்கள மஞ்சு இன" இணையத் தளத்தின் தலைவரான லியு பிங் மஞ்சு இனப் பண்பாடு பற்றி கருத்து தெரிவித்ததாவது
"மஞ்சு இனப் பண்பாட்டில் பலவற்றை நாங்கள் கையேற்று வெளிக் கொணர வேண்டும். சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில், மஞ்சு இன மக்களுக்கு சொந்த எழுத்துகள் உள்ளன. இது, அற்புதமாக இருக்கும். மஞ்சு இன ஆடைகளில், Qi Pao என்னும் ஒரு வகை நீண்ட சட்டை, அசல் உதாரணமாகத் திகழ்கின்றது. இன்றைய காலத்தில், நாங்கள் இச்சட்டையை நிலைநிறுத்த வேண்டும். வடிவத்தில், நிறத்தில் இதை வளர்க்க வேண்டும். இதனை, நவீன வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
1 2 3
|