• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-08 14:52:22    
தனியார் நிறுவனத்தில் ஆலோசகராகியுள்ள Andreas Fulda

cri

"நான், சீனச் சர்வதேச தனியார் நிறுவன ஒத்துழைப்பு முன்னேற்றச் சங்கத்தின் சர்வதேச ஆலோசகர். என் பெயர் Andreas Fulda. இன்று செய்தி ஊடகப் பயிற்சி வகுப்பை நடத்துகின்றோம். எங்கள் புதிய திட்டப்பணி ஒன்றை அனைவருக்கும் விவரிப்பது எங்கள் நோக்கம். இந்நடவடிக்கை மூலம், மேலும் அதிக நண்பர்களை அறிந்து கொள்வது எங்கள் விருப்பம்" என்று ஜெர்மன் இளைஞர் ஒருவர் சீன மொழியில் கூறினார். அவர் தான் Andreas Fulda. அவருக்கு வயது 28.

சீனச் சர்வதேச தனியார் நிறுவன ஒத்துழைப்பு முன்னேற்றச் சங்கத்தில் அவர் பணி புரிகின்றார். சீனாவின் பின்தங்கிய பகுதிகளில் சமூக-பொருளாதார வளர்ச்சியை தூண்டும் பொருட்டு, வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக வளர்ச்சி ஆகிய துறைகளில் சீன-அன்னிய தனியார் நிறுவனங்களுக்கிடையே தொடர்பையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பது இச்சங்கத்தின் முக்கிய பணியாகும். இந்தச் சங்கத்தில் திட்டப்பணிகளுக்கு யோசனைகளை முன்வைப்பதும், சில சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்பு மேற்கொள்வதும் Andreas Fuldaவின் கடமையாகும்.

சீனியர் பள்ளியில் சக மாணவி ஒருவரின் தொடர்பு காரணமாக, சீனாவுடன் தாம் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக அவர் கூறினார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:

"அவள், சீன மரபு வழியுடைய அழகான பெண். ஓரே சீனியர் பள்ளியில் நாங்கள் சக மாணவர்கள். அவள் மூலம், சீனாவை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது." என்றார் அவர்.

இந்த அழகான கீழை நாட்டுப் பெண்ணினால், கீழை நாடுகளின் நேர்த்தியான பண்பாடுகள், குறிப்பாக சீனப் பண்பாடு மீது இளம் Andreas Fuldaவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சீனியர் பள்ளி படிப்பை முடித்த பின், தனது அண்ணனின் ஊக்கத்துடன், ஜெர்மன் Koeln பல்கலைக்கழகத்தின் கீழை நாட்டு கலைத் துறையில் Andreas Fulda சேர்ந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், அவர் பெய்ஜிங் வந்து, இந்த தனியார் நிறுவனத்தில் சர்வதேச ஆலோசகராக வேலை செய்யத் துவங்கினார்.

"எனது வாழ்க்கையும் பணிகளும் சீனாவுடன் தொடர்பு உடையவை. வெவ்வேறான கோணங்களிலிருந்து சீன நாட்டை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு உண்டு. இது எனக்கு அதிர்ஷ்டம். இது மகிழ்ச்சி தந்துள்ளது." என்றார் அவர்.

சீனாவில் தனது பணியை Andreas Fulda மிகவும் நேசிக்கின்றார். அவர் மிகவும் ஈடுபாட்டோடு வேலை செய்கிறார். இந்த ஒத்துழைப்பு முன்னேற்றச் சங்கம் பெய்ஜிங்கில் அமைந்துள்ளது. கூட்டங்களிலும் ஆராய்ச்சி நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள அவர் அடிக்கடி வெளியூருக்குச் சென்று வருகின்றார். தனது பணியின் தேவை காரணமாக, சாதாரண சீன மக்களுடன் அவர் அடிக்கடி பேசிப்பழகுகிறார். வெகு விரைவில், அவரது வாழ்க்கை சூழலில் மாற்றம் ஏற்பட்டது. அவர் சக பணியாளர்களுடன் சுமுகமாக பழகுவது மட்டுமல்ல, தாம் வாழும் குடியிருப்பு பகுதியில் உள்ள அயலார்களுடனும் சுமுகமாக பழகுகிறார்.

1  2