• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-08 14:52:22    
தனியார் நிறுவனத்தில் ஆலோசகராகியுள்ள Andreas Fulda

cri

Andreas Fulda நேர்மையானவர். சில பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் போது, தனது கருத்துக்களை அவர் நேர்மையாகத் தெரிவிக்கின்றார். மற்றவர்களுக்காக தனது சொந்தக் கருத்தை மறைப்பதில்லை என்று அவரின் சக பணியாளர்கள் கூறினர். தவிர, கவனம், குழு விழிப்புணர்ச்சி ஆகியவை Andreas Fuldaவின் மேம்பாடாகும். இதனால், சீனாவின் சக பணியாளர்களிடையே அவர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். அவரின் மேலாளரும், இச்சங்கத்தின் தலைமைச் செயலாளருமான Huang Hao Ming கூறியதாவது:

"அவர் உணர்வுபூர்வமாக வேலை செய்கின்றார். தாம் ஜெர்மன் நாட்டவராக இருந்த போதிலும், சீன தனியார் நிறுவன ஒத்துழைப்பு முன்னேற்ற சங்கத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். தனிநபரின் பிரதிநிதியாக இல்லை. என் கருத்துகள் வேறுபட்டதாக இருக்கலாம். இருந்த போதிலும், நிறுவனத்தின் நலனை நான் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்." என்றார் அவர்.

சீனாவில் வேலை செய்து, வாழும் சில ஆண்டுகளில், சீன சக பணியாளர்களின் நம்பிக்கையை Andreas Fulda பெற்றார். இது மட்டுமல்ல, சீன நண்பர்கள் பலருடன் அவர் பழக்கம் கொண்டார்.

பெய்சிங்கில் வாழும் சில ஆண்டுகளில், சீன சமூகத்தின் விரைவான வளர்ச்சி மீது Andreas Fulda ஆர்வம் கொள்கின்றார். அவர் பேசுகையில் இங்கு பெரும் மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. நாள்தோறும் விடியற்காலையில், வேலை செய்ய சங்கத்துக்கு செல்வதும் மகிழ்ச்சி தருகின்றது. பணிகள் கடினமாக இருந்த போதிலும், அறை கூவல் நிறைந்தது. வேலைக்கு பிந்திய ஓய்வு நேரத்தில், சீன மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களைப் பிடித்து, தனிச்சிறப்பு வாய்ந்த உணவு விடுதிகளில் சீன உணவை அனுபவிக்க Andreas Fulda விரும்புகின்றார். சில சமயங்களில், தனக்கு பிடிக்கும் பாடல்களை பாடுகின்றார். அண்மையில், தனது சீன நண்பர் ஒருவரிடமிருந்து "வெகு தொலைவிலான இடம்" என்னும் சீன நாட்டுப்புறப்பாடலைக் கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

"வெகு தொலைவில் ஓரிடத்தில் அன்பான பெண்.

அவளின் கூடாரத்துக்கு ஊடாக செல்லும் மக்கள்

அவளை திரும்பி பார்ப்பது வழக்கம்" என்று அவர் பாடுகின்றார்.

Andreas Fulda இன்னும் திருமணமாகாமல் இருக்கின்றார். சீன பாரம்பரிய பெண்களின் தனிச்சிறப்பை அவர் விரும்புகின்றார். சீன பெண்கள் மென்மையானவர்கள், திறமைமிக்கவர்கள் என்று அவர் கருதுகின்றார். இத்தகைய பெண் தனக்கு பிடிப்பதாகவும், எதிர்காலத்தில், சீன பெண்ணை தாம் திருமணம் செய்யக்கூடும் என்றும் அவர் கூறுகின்றார். சீன மொழியை கற்றுக்கொள்ளத் துவங்கியது முதல், இது வரை, சீனப் பண்பாட்டுடன் தொடர்பு கொள்வதற்கு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. தம்மை சீனப் பண்பாட்டில் இருந்து பிரிக்க முடியாது என்றும், சீனாவில் அல்லது ஜெர்மனியில் சீனப் பண்பாடு தனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறியுள்ளது என்றும் Andreas Fulda கருதுகின்றார்.


1  2