இந்த மாதிரியான நடவடிக்கைகளால் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வு பெண்கள் மனதில் பதிந்து விடுகிறது. இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு எல்லாம் சேர, 'ஏன்தான் பெண்ணாக பிறந்தோமோ' என்ற சலிப்பு தட்டுகிறது.

மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல் நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்று புரிய வைக்கும் முயற்சியில் இந்த நிகழ்ச்சி மூலம் நாங்கள் பேசுகிறோம்.
மாதவிலக்கு வரும் மூன்று ஐந்து நாட்களில் (சிலருக்கு கூடுதலாகலாம், குறையலாம்) உண்டாகும் அத்தனை பிரச்னைகளை பற்றியும் பிரபல மகப்பேறு நிபுணர்களான இந்திய டாக்டர் ஞானசௌந்தரி, டாக்டர் தமிழிசை, டாக்டர் சுமதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துணையோடு முதலில் இருந்து கடைசி வரை தெளிவு படுத்தி சுலபமான கேள்வி-பதில் வடிவில் வழங்கியிருக்கிறோம்.
1 2 3 4
|