• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-17 22:43:59    
வே இன விவசாயி வாங் கிம் யுன்

cri

கிர்க்கிஸ்தானின் தலைநகர்

வாங் கிம் யுன் என்பவர், சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சி பிரதேசத்தின் ஒரு சாதாரண விவசாயி ஆவார். இருப்பினும், அவரது திருமணம் அசாதாரணமானது. கிர்க்கிஸ்தானில் பணி புரிந்த காலத்தில், அங்கு ஒரு அழகான இளம் பெண்ணைச் சந்தித்தார். ஒரு திங்களுக்கு முன், அவர், இப்பெணை சீனாவுக்குக் கொண்டு வந்து, விறுவிறுப்பான திருமண விழா நடத்தினார். எல்லை கடந்த காதல் கதையை சொல்லுவோம்.

26 வயதான வாங் கிம் யுன், உயரமானவர் அல்ல. கொஞ்சம் கருப்பான நிறமடையவர். அயரா உழைக்கும் எளிமைமிக்க ஒரு வே இன விவசாயி. 2004ம் ஆண்டு வசந்த காலத்தில், உள்ளூர் அரசின் ஏற்பாட்டில் உருவான பணி குழுவில் சேர்ந்து வெளிநாட்டிற்கு போன்னார். கிர்க்கிஸ்தானின் தலைநகரான Bishkekக்கு அருகில் ஒரு பண்ணையில் சாகுபடி செய்து, 4 ஹெக்டர் நிலப்பரப்பில் தக்காளி பயிரிட்டார்.

வெளிநாட்டுக்குச் சென்ற துவக்கத்தில், பல இன்னல்களை அவர் சந்தித்தார். குறிப்பாக, மொழி பிரச்சினை. ரஷிய மொழி அவருக்குத் தெரியாத காரணமாக, பிறருடன் பேச முடியவில்லை. உள்ளூர்வாசி ஒருவரின் உதவி அவருக்கு மிகவும் தேவைப்பட்ட போது, ஓரியா தோற்றமளித்தார். ஓரியா, உயரமானவர். நீல நிற கண்கள். வெள்ளை நிற தோல். பார்வைக்கு, அழகானவர். அவரது குடும்பம், வாங் கிம் யுன் பணிபுரியும் பண்ணைக்கு அருகில் வசித்தது. பண்ணையின் வயலில் இருவரும் முதன்முறையாக சந்தித்தனர். அப்போதைய நிலையை நினைத்துப் பார்த்து, வாங் கிம் யுன் கூறியதாவது:

"ஒரு நாள் கொஞ்சம் மழை பெய்தது. எங்கள் வயலில் மங்கோலிய கூடாரம் ஒன்று உண்டு. அனைவரும் மழையைத் தவிர்க்க அங்கே வந்தனர். இரண்டு பெண் நண்பர்களுடன் அவரும் வந்தார். ரஷிய மொழியில் என்னுடன் பேசினர். ஆனால், எனக்கு புரியவில்லையே. இது தான் முதல் சந்திப்பு" என்றார்.

வாங் கிம் யுனின் உறைவிடம், ஓரியா வீட்டிலிருந்து அவ்வளவு தூரமில்லை. வாங் கிம் யுன் உலவப்போகும் போது அடிக்கடி ஓரியாவைச் சந்தித்தார். ஓரியாவோ, மிகவும் உற்சாகத்துடன் வாங் கிம் யுன்னுடன் பேசி மகிழ்ந்தார். தவிரவும், சுயவிருப்பத்துடன் வாங் கிம் யுன்னுக்கு ரஷிய மொழியைக் கற்பித்தார்.

அருகில் இருந்த பூங்காவில் வாங் கிம் யுன் ரஷிய மொழி பேசப்பழகினார். நேரம் கிடைக்கும் போது, ஓரியா அவருக்கு கற்பித்தார். அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல என்ற போதிலும், தாம் விரும்பி செய்வதாக ஓரியா சொன்னார்.

"அப்போது, காலநிலை மிக வெப்பம என நாங்கள் இருவரும் உணர வில்லை. படிப்பு மிகவும் உணர்வுப்பூர்வமானது. வாங் கிம் யுன் படிக்க மிகவும் விரும்புகின்றார். அவருக்கு கற்பிக்கவும் நானும் விரும்பினேன். அவர், ஒரு சீனர். மொழி பிரச்சினையினால், பல இன்னல்களை சந்திப்பது இயல்பு. அவர் விரைவில் கற்பதற்காக, அதிகமாக கற்பிக்க வேண்டும் என நினைத்தேன்" என்றார். ஓரியாவின் உதவியுடன், வாங் கிம் யுனின் ரஷிய மொழி தரம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. இருவரின் தொடர்பு படிப்படியாக அதிகரித்தது. அவர்கள் அடிக்கடி உரையாடுவதுண்டு. இவ்வாறு, பரஸ்பரம் மற்ற நாட்டின் நடையுடை பாவனையை அறிந்து கொண்டனர். நெருங்க நெருங்க, இருவரும் நல்ல நண்பர்களானார்கள்.

1  2