• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-17 22:43:59    
வே இன விவசாயி வாங் கிம் யுன்

cri

கிர்க்கிஸ்தானின் தலைநகர்

விழா நாட்களிலோ விடுமுறை நாட்களிலோ, ஓரியா, வாங் கிம் யுனின் தங்குமிடத்துக்குப் போய், சமையல் செய்தார். ஆடைகளைக் கழுவினார். ஓரியாவின் கவனமான பராமரிப்பினால், வீடு உண்டு என்ற உணர்வு, வாங் கிம் யுனுக்கு ஏற்பட்டது.

2005ம் ஆண்டு வசந்தகாலத்தில், கிர்கிஸ்தானில் தமது வேலையை வாங் கிம் யுன் முடித்துக்கொண்டார். நாடு திரும்புவதற்குப் பதிலாக, கஜக்ஸ்தான் போய், தக்காளியைப் பயிரிட்டார். பணி மிகவும் கடினமாகும் என அஞ்சி, ஓரியா வாங் கிம் யுனை போகாமல் தடை செய்தார். ஆனால், வாங் கிம் யுன் போக வேண்டும் என்பதில் ஊன்றி நின்றார். புறப்படும் நாளன்று, ஓரியா அவரை வழியனுப்பிய போது, ஒன்றும் பேசவில்லை. வாங் கிம் யுனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அவர் கூறியதாவது:

"அன்று அவர் பேசவில்லை. குடிக்கவில்லை. சாப்பிடும் போது, கொஞ்சும் உட்கொண்ட பின், அவர் அழத்துவங்கினார். புறப்படத்துவங்கிய பின், வாகனத்தில் இருந்த போது, எனக்கு ஏமாற்ற உணர்வு ஏற்பட்டது. இருப்பினும் எனக்கு நம்பிக்கை உண்டு. அதாவது, பணம் சம்பாதித்த பின், திரும்ப வேண்டும். இருவர் இவ்வளவு நெருங்கியிருப்பதால், பிரிவு காரணமாக இவ்வுணர்வில் பிளவு ஏற்படுவதை காண விரும்பவில்லை" என்றார்.

வாங் கிம் யுன், கஜக்ஸ்தானில் பணிபுரிந்த நாட்களில், இருவரும் வெகு தூரத்தில் பிரித்து வாழ வேண்டிய நிலையில் இருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் நினைத்தனர். இதற்கிடையில், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஓரியா வாங் கிம் யுனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், அவர் மிகவும் கவலைப்பட்டார். அவர் கூறியதாவது:

"அவர் கஜக்ஸ்தானில் தங்கியிருந்த போது, நான் தனிமைப்பட்டேன். வாழ்க்கையில் ஏதோ இழந்து விட்டதது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. சில வேளையில் அவருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது எனக்கு மிகவும் கவலையே. தொடர்பு கொள்ள முடிந்ததும், மனதில் ஆனந்தமே" என்றார்.

கஜக்ஸ்தானில் ஒரு திங்கள் மட்டும் தங்கிய பிறகு கிர்கிஸ்தானுக்கு வாங் கிம் யுன் திரும்பினார். ஒருவரை ஒருவர் பிரித்துச் செல்ல முடியாது என இப்போது இருவரும் உணர்ந்து கொண்டனர். ஆதலால் ஓரியாவை மணம் செய்ய வாங் கிம் யுன் முடிவு செய்தார்.

வாங் கிம் யுன், இந்நற்செய்தியை, சீனாவிலுள்ள தமது தாய்-தந்தைக்கு உடனடியாக தெரிவித்தார். இந்த வெளிநாட்டு மணமகளைச் சந்திக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர். 2005ம் ஆண்டு நவம்பர் திங்களின் இறுதியில், வாங் கிம் யுன், ஓரியாவுடன் சீனா திரும்பினார். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். சீனாவின் பாரம்பரிய பழக்கங்களின் படி, விமரிசையான விழா நடைபெற்றது. அப்போது சிறிய நகரவாசிகள் அனைவரும் இந்த ரஷிய இளம் பெணை பார்க்க வந்து, அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இப்போது, வாங் கிம் யுன் குடும்பம் இணக்கமாக வாழ்கின்றனர். இந்த வெளிநாட்டு மணமகளை மிகவும் விரும்புவதாக மாமியார் சொன்னார்.

குடும்ப வாழ்க்கையில் வெகு விரைவில் இசைவாக சேரும் வகையில், தற்போது ஓரியா, சீன மொழியைக் கற்றுக்கொள்கின்றார். வசந்த காலத்தில் கிர்கிஸ்தானுக்குப் போய், விவசாயத்தில் ஈடுபட்டு, சாதனை புரிய வேண்டும் என்று அவர்கள் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.


1  2