 சீனாவில், சொந்தமாக கார்களை வைத்திருக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், கடந்த சில ஆண்டுகளாக, கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்கள் படிப்படியாக பரவலாகி வருகின்றன. தற்போது, சாலையில் கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றின் புதுமையான பளிச்சென்ற தோற்றம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெய்ஜிங்கின் மேற்கு புறநகரில், சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் இதற்கென ஒரு சந்தை உள்ளது. அங்கு கார்களுக்கு கூடுதல் சாதனங்களைப் பொருத்தும் சுமார் 700 நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கிறது.
Fei Kai என்னும் கார்களுக்கு கூடுதல் சாதனங்களை பொருத்தும் நிறுவனத்தில், அதன் மேலாளர் திரு கோ பிங்குடன் செய்தியாளர் உரையாடினார். இந்நிறுவத்தில் உள்ள அடுக்குகளில் வெவ்வேறான கார் சாதனங்கள் இருக்கின்றன. மேலே இருந்து பல்வகை ஸ்டியரிங்சக்கரங் சொகுசு இருக்கை உறைகளும் தொங்குகின்றன. 10க்கு அதிகமான பணியாளர்களில் சிலர் வாடிக்கையாளருக்கு வணிகப் பொருட்கள் பற்றி விவரிக்கின்றனர். சிலர், கணிணி மூலம் வாடிக்கையாளருக்கு காரில் சாதனங்களை பொருத்தும் வடிவமைப்பை வரைந்து காட்டுகின்றனர்.
ஒரு கணிணி முன்னால் உருவரைவு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற கோ பிங் செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக, இந்நிறுவனத்தில் வியாபாரம் மிகவும் நன்றாக உள்ளது. காரில் சாதனங்களை பொருத்த, இங்கு வரும் வாடிக்கையாளர் மிக அதிகம் என்றார். அவர் கூறியதாவது—
"திங்கள்தோறும் இந்நிறுவனத்தில் 60-70 கார்களுக்கு கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார்களின் உரிமையாளர்களில், பெரும்பாலோர் இளைஞர்கள். கார்களில் சாதனங்களை பொருத்தும் போது, தோற்றம், உந்துவிசை ஆற்றல் ஆகியவற்றை மாற்ற விரும்புவோர் அதிகம். உந்துவிசை ஆற்றலை உயர்த்தி, வேகத்தினால் ஏற்படும் மோகத்தை அனைவரும் விரும்புகின்றனர். சில நண்பர்கள் தோற்றத்தை மாற்ற விரும்புகின்றனர்."
பெய்ஜிங் சாலைகளில், கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்கள் அடிக்கடி காணப்படுகின்றன. சில கார்களின் உடம்பில் பல்வேறு படங்கள் ஒட்டப்படுகின்றன. கால்மிதிகள் பொருத்தப்படுகின்றன. கார்களின் உச்சியில் ஆன்ட்டெனா பொருத்தப்படுகின்றது. சில கார்களின் வெளித்தோற்றத்தில் பெரும் மாற்றம் இல்லை. ஆனால், கார்களின் உள் பகுதியில் மாற்றம் அதிகம். இந்த கார்களின் உரிமையாளர் பெரும்பாலும் இளைஞர்கள். சாலையில், மற்றவர்கள் தங்களது கார்களைப் பார்ப்பது, அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
1 2
|