
கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார் ஒன்றின் உரிமையாளர் சியு ஜயா மிங் செய்தியாளரிடம் பேசுகையில், ஓராண்டுக்கு முன், 90 ஆயிரம் யுவான் செலவிட்டு, ஷாங்காய் Volkswagen நிறுவனம் உற்பத்தி செய்த Gol காரை வாங்கிய பின், சுமார் 20 ஆயிரம் யுவான் செலவு செய்து இந்த காரில் சாதனங்கள் சிலவற்றைப் பொருத்தியதாக கூறினார்.
கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார் வெளிநாடுகளுக்கு புதியது அல்ல. இத்தகைய கார் முதலில் கார் பந்தயத்திற்காக தோன்றியது. வேகத்தை உயர்த்தி, மேலும் சிறந்த சாதனை பெறுவதற்காக, கார் ஓட்டுநர் தமது காரில் உந்து விசை, புகை போக்கி உள்ளிட்ட பல உதிரிபாகங்களை பொருத்தினார். கடந்த நூற்றாண்டின் 60, 70ஆம் ஆண்டுகளுக்குப் பின், கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் சாதாரண மக்களின் குடும்பங்களில் நுழைந்தது. சீனாவில் இத்தகைய கார் மிகவும் தாமதமாகவே வந்தது. கடந்த சில ஆண்டுகளாகத் தான் கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட காரை சீன மக்கள் ஏற்றுக் கொண்டனர். சீன சமூக அறிவியல் கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஹான் மெங், இந்த கார் வரவேற்கப்பட்ட காரணம் பற்றி விவரித்தார். அவர் கூறியதாவது—
"கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார் தாமதமாக சீனாவில் பரவியது. கார் பந்தய ஆர்வத்தினால், காரை நேசிப்பவர்களுக்கு காரில் கூடுதல் சாதனங்களை பொருத்தும் எண்ணம் ஏற்படுகிறது. தற்போது முக்கியமாக இளைஞர்கள் தான் காரில் கூடுதல் சாதனங்களை பொருத்துகின்றனர். இதன் மூலம் தமது காரின் வித்தியாசத்தையும் தமது பண்பையும் வெளிப்படுத்த அவர்கள் விரும்புகின்றனர்" என்றார் அவர்.

கூடுதல் சாதனங்களை காரில் பொருத்துவது, சீனாவில் வளரும் ஒரு புதிய தொழிலாக மாறியுள்ளது. ஆகவே, கண்மூடித்தனமாக சாதனங்களைப் பொருத்தி, காரின் பாதுகாப்பு திறனைப் பாதிக்காமல் தவிர்க்கும் பொருட்டு, சீன அரசு சில விதிகளையும் கட்டுப்பாடுகளையும் வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, பதிவு செய்யப்பட்ட காரின் கட்டமைப்பையும் தனிச்சிறப்பையும் மாற்றக் கூடாது, காரின் ரகத்தையும் உந்து விசையின் எண்ணையும், காரின் அடையாளக் குறியையும் மாற்றக் கூடாது. இதனால், சீனாவில் காரை வாங்கும் மக்கள் சாதனங்களைப் பொருத்தும் போது, முக்கியமாக காரின் தோற்றத்தை மாற்றுவது, அல்லது, வேகத்தை உயர்த்த சிறு உதிரிபாகங்களைப் பொருத்துகின்றனர். திரு சியு ஜியா மிங், தமது காரில் முன்னேறிய உந்துவிசை ஆற்றலை உயர்த்த inlet box என்ற கருவியைப் பொருத்தினார்.
காரில் சாதனங்களைப் பொருத்தும் போது, பெய்ஜிங் Si Yuan கார் பொருத்தும் நகரில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அவர் வழக்கமாக செல்கிறார். ஒவ்வொரு காருக்கு சிறப்பான பண்பு உண்டு. குறிப்பிட்ட பணியாளர் அதற்கு ஏற்ற சாதனங்களை வழங்கலாம் என்று அவர் கூறினார். சாதனங்களைப் பொருத்த விரும்பும் காரின் உரிமையாளர்களை அடிக்கடி சந்தித்து, நண்பர்களாகின்றனர் என்று Fei Kai சாதனங்களைப் பொருத்தும் நிறுவனத்தின் திரு கோ பிங் கூறினார்.
கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்கள், சாலை தோற்றத்தையும் காரை நேசிப்பவரின் வாழ்க்கையையும் செழிப்பாக்கியுள்ளன. கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட காரைக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் சாதனங்களைப் பொருத்தும் தொழிலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் இது மகிழ்ச்சி தருகிறது. 1 2
|