இப்போது பெய்சிங்கில் சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டமும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் ஆண்டு கூட்டமும் நடைபெற்று வருகின்றன. கடையாலுருட்டி எம் பிச்சைமணி, மீனாட்சி பாளையம், கே அருண், முனுகப்பட்டு கண்ணன்சேகரர், மணமேடு எம் தேவராஜா ஆகியோர் சீனாவில் ஜனநாயக நடைமுறையாக்கம் பற்றி அறிய விரும்புகின்றனர். இந்தக் கூட்டத் தொடர்கள் நடைபெறும் வாய்ப்பினை பயன்படுத்தி பிரதிநிதிகளின் கருத்துக்களின் மூலம் சீன ஜனநாயக நிலைமை பற்றி விளக்க விரும்புகின்றோம். ராஜாராம், தி. கலையரசி இருவரும் இன்றைய நிகழ்ச்சியில் உரையாடுகின்றோம்.
ராஜா.....சீனாவில் ஜனநாயக அரசியல் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று சீன தலைமை அமைச்சர் வென் சியா பாவ் கடந்த மார்ச் 5ம் நாள் மக்கள் பேரவை கூட்டத் தொடர் துவங்கிய போது அரசு பணி அறிக்கை அளித்துப் பேசுகையில் வாக்குறுதியளித்தார். அவருடைய கருத்தை கேட்கலாமா?
சீனாவில் ஜனநாயக அமைப்பு முறை முழுமையாக்கப்பட வேண்டும். ஜனநாயக வடிவத்தை மேம்படுத்தி, ஒழுங்கான முறையில் குடி மக்களின் அரசியல் ஈடுபாடு விரிவாக்கப்பட வேண்டும். சட்டத்தின் படி ஜனநாயக தேர்தல், ஜனநாயக கொள்கை மடிவு, ஜனநாயக நிர்வாகம், ஜனநாயக கண்காணிப்பு ஆகியவற்றில் மக்கள் பங்கெடுப்பதற்கு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
1 2
|