கலை......இப்போது மக்கள் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்கின்ற பிரதிநிதிகளில் பலர் கிராமங்களிலிருந்து வந்தவர்கள். சீனாவின் கிராமங்களில் கீழ் மட்டத்தில் பணி புரியும் அனுபவங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்களில் மௌ லான் சுன் அம்மையார் சீனாவின் சுச்சான் மாநிலத்தின் தொலை தூர கிராமத்திலிருந்து வந்த பிரதிநிதி. கிராமவாசிகளின் தன்னாட்சி அமைப்பான கிராம கமிட்டியின் தேர்தலில் கிராமவாசிகள் மிகவும் அக்கறை செலுத்துகின்றனர் என்று அவர் நமது செய்தியாளர்களிடம் கூறினார்.
ராஜா....விளக்கமாக சொல்லமுடுயும?
கலை.......சொல்கின்றேன்.
இப்போது கிராமவாசிகள் தங்களது கிராமத்தின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை செலுத்துகின்றனர். தரம் தகுதி, பணியாற்றல் திறன் படைத்த கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்ய அவர்கள் விரும்புகின்றனர். ஆகவே இதில் பங்கெடுக்கும் உற்சாகம் மிக உயர்வானது.
ராஜா......மௌ லான் சுன் அம்மையாளர் மட்டுமல்ல வட மேற்கு சீனாவின் சிங்காய் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலிருந்து வந்த தேசிய மக்கள் பேரவை பிரதிநிதி ஷாமுஷாக் அம்மையார் கிராம கமிட்டியின் தேர்வு பற்றி விவரிக்கின்றார்.
கலை.....ஜனநாயகம் முறைப்படி ஊழியர்களை தேர்ந்தெடுப்பது மேல் தலைமை பீடம் ஊழியரை அனுப்புவதை விட சிறப்பானது.தேர்தலில் தீவிரமான போட்டாபோட்டி இருந்தாலும் ஜனநாயகம் உண்மையாக வெளிப்படுகிறது. அல்லவா. மக்களால் அங்கீகரிக்கப்பட்டு அனைவருக்குக்கும் நன்மை செய்யும் ஆளை கீழ் மட்ட ஊழியராக தெரிவு செய்வது சிறப்பானது என்றார் அவர்.
ராஜா......சீனாவின் குவாந்துங் மாநிலம் செழுமையான மாநிலமாகும். அங்கே வாழ்கின்ற பிரதிநிதிகளின் கருத்து என்ன. நாம் பார்க்கலாமா?
கலை...... இந்தப் பிரதிநிதியின் பெயர் குவான் ரன் ரியோ. "லோ நான் கிராமக் கமிட்டியின் தலைவராக"பணிபுரிகின்றார். அவருடைய கிராமத்தின் ஆண்டு சராசரி தனிநபர் வருமானம் 10 ஆயிரம் யுவானை தாண்டியுள்ளது. கீழ் மட்ட ஜனநாயகம் பற்றி அவர் கூறியதாவது
ராஜா.....எங்கள் கிராம கமிட்டி ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கீழ் மட்டத்தில் பணிபுரின்ற நாங்கள் நீதி நியாயமான முறையில் கிராம விவகாரங்களை கையாள வேண்டும். ஊழமின்றி சேவை புரிய வேண்டும். தேர்தெந்டெடக்கப்பட்ட கிராம கமிட்டி சில ஆண்டுகளாக இயங்கியுள்ளது. ஊழியர்களை நேரடியாக கண்காணிப்பதன் மூலம் எங்கள் கிராமத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. 1 2
|