• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-14 18:01:27    
வாழ்க்கையில் தகுந்த வெப்பம் எது

cri
நமது வாழ்க்கையில் எந்த அளவுக்கு வெப்பம் இருப்பது நல்லது என்பதை நீங்கள் கவனித்தீர்களா?

முகத்தை கழுவும் போது தண்ணீரின் வெப்பம் முப்பத்தாறு டிகிரி செல்ஸியஸாக இருப்பது நல்லது. உடல் பாகங்களை கழுவும் முறை பற்றி பார்ப்போம். படுக்கைக்கு போவதற்கு முன் உடல் பாகங்களை கழுவ வேண்டுமானால், நாற்பது டிகிரி செல்ஸியஸ் முதல் ஐம்பது டிகிரி செல்ஸியஸ் வரையான வெப்பம் உள்ள வெண்ணீர் சிறப்பானது. ஏனென்றால் இந்த நீர் வெப்பம் உடலில் உள்ள ரத்த குழாயை வரிவாக்க துணை புரியும். ரத்தத்தின் ஓட்டத்தை அப்போது துரிதப்பட்டதும் சீக்கிரமாக தூங்கும் நிலையில் நுழையலாம்.

குளிக்கும் போது தண்ணீரின் வெப்பம் முப்பது டிகிரி செல்ஸியஸ் முதல் முப்பத்தொன்பது டிகிரி செல்ஸியஸ் வரை இருப்பது சிறப்பானது. இந்த வெப்பம் மனித உடம்பின் வெப்பத்துக்கு சமமாகும். சுகமான உணர்வை இந்த வெப்பம் தரமுடியும்.

படுக்கை அறையில் வெப்பம் குளிர் காலத்தில் பதினாறு டிகிரி செல்ஸியஸ் முதல் இருப்பது டிகிரி செல்ஸியஸ் வரையான சிறந்தது. கோடைகாலத்தில் அறையின் வெப்பம் இருப்பதைந்து டிகிரி செல்ஸியஸ் முதல் இருப்பதேழு டிகிரி செல்ஸியஸ் வரை இருப்பது சிறப்பானது.

தேணீர் குடிக்கும் போது தேயிலையை எழுப்பது டிகிரி செல்ஸியஸ் முதல் என்பது டிகிரி செல்ஸியஸ் வரையான வென்னீரில் போட்டுவது நல்லது. அப்போது அதன் சத்து குறையாமல் இருக்கும். அறுப்பதைந்து டிகிரி செல்ஸியஸ் வரை சூடான தேநீர் குடிப்பதற்கும் தாகத்தை தணிப்பதற்கும் உகந்தது.

பீர் குடிக்கும் போது கோடை காலத்தில் அதன் வெப்பம் ஆறு டிகிரி செல்ஸியஸ் முதல் எட்டு டிகிரி செல்ஸியஸ் வரையில் இருக்க வேண்டும். குளிர் காலத்தில் பத்து டிகிரி செல்ஸியஸ் முதல் பணிரண்டு டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலையில் உள்ள பீர் குடிப்பது நல்லது.

பழச் சாறு வெப்பம் எட்டு டிகிரி செல்ஸியஸ் முதல் பத்து டிகிரி செல்ஸியஸ் வரை இருப்பது இயற்பானது குடிக்கும் போது சுவையை நன்கு உணரலாம்.

தேன் பருகும் போது அறுப்பது டிகிரி செல்ஸியஸ் சூடாக உள்ள வென்னீரில் கலந்து குடித்தால் நல்லது. அப்போது அதிலுள்ள சத்து குறையாது.

சிற்றுண்டி உட்கொள்ளும் போது அதன் வெப்பம் முப்பதேழு டிகிரி செல்ஸியஸில் இருந்தால் சிறப்பானது.

உப்பான மற்றும் கசப்பான உணவு சாப்பிடும் போது வெப்பம் அதிகமாக இருந்தால் கசப்பு மற்றும் உப்பான சுவை குறையும்.

1  2