• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-17 18:12:52    
திபெத்தில் திரைப்படத்தைப் பார்ப்பதில் இன்னல் இல்லை

cri

அழகான திபெத்

திபெத் இன மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தைப் பார்ப்பது, திபெத் இன விவசாயிகளுக்கும் ஆயர்களுக்கும் ஆனந்தமளிக்கிறது. திபெத் இன விவசாயியான சு மா அம்மையார் பேசுகையில், தாம் திரைப்படத்தை மிகவும் விரும்புவதாகக்கூறினார். சில திரைப்படங்கள் மூலம் வெளிப்புற உலகம் எது என்பதை அறிந்து கொள்வதாகவும், வேளாண்மை பற்றிய சில அறிவியல் கல்வியியல் திரைப்படங்களைப் பார்த்த பின், மேலும் அதிகமாக அறிவியல் தொழில் நுட்ப அறிவை அறிந்து கொண்டுள்ளதாகவும் சாகுபடி செய்வதற்கு இது துணை புரிவதாகவும் அவர் சொன்னார்.

இப்போது திங்களுக்கு ஒருமுறை நாங்கள் திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது. திரைப்படங்களில், புத்தம் புதிய தகவல்களை அறிந்து கொண்டுள்ளேன். அறிவியல் தொழில் நுட்ப முறையில் சாகுபடி செய்வது பற்றிய திபெத் இன மொழியாக்கப்பட்ட திரைப்படங்களை பார்க்க நான் மிகவும் விரும்புகின்றேன், எடுத்துக்காட்டாக, வெப்பக் கூடு அறையில் பயிரிடுவது, வேளாண் இயந்திரத்தின் பயன்பாடு, அதன் பராமரிப்பு, கோழி வாத்து வளர்ப்பு, கறவை மாடுகளின் கறவைத் திறனை மேம்படுத்துதல் முதலியவை பற்றிய திரைப்படங்களை மிகவும் விரும்புகின்றேன். இத்திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலம், தொடர்புடைய நுட்பத்தை நாங்கள் எளிதில் கிரகித்துக்கொள்ள முடிகிறது என்றார்.

திரைப்பட மூலம் வெப்ப கூடு அறையில் காய்கறிகளை எப்படி பயிரிடுவது என்பதைக் கற்றுத் தேர்ந்துள்ளதாக அவர் சொன்னார். குளிர்காலத்தில், அவரது வெப்ப கூடு அறையில் பச்சை பசேலன்ற காய்கறிகள் வளர்கின்றன. இக்காய்களில் ஒரு பகுதி தமது குடும்பத்துக்கு வழங்கப்படும். ஒரு பகுதி, விற்பனைக்காக லாசாவுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் ரொம்ப பணம் சம்பாதித்திருப்பதாக அவர் கூறினார்.

சு மா கூறியது போலவே, இப்போது, திரைப்படம் என்பது, திபெதிய விவசாயிகளும் ஆயர்களும் வெளிப்புற தகவல்களையும் அறிவியல் தொழில் நுட்ப அறிவையும் புரிந்து கொள்ளும் ஒரு முக்கிய வழிமுறையாகியுள்ளது. குறிப்பாக திபெத் இன மொழியாக்கப்பட்ட அறிவியல் கல்வியியல் திரைப்படங்கள், விவசாயிகள் ஆயர்களின் வாழ்க்கைத் தேவைக்கிணங்க தயாரிக்கப்பட்டவை. எனவே, அவர்களின் கருத்தை மாற்றுவது, தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது, வாழ்க்கையைச் சீராக்குவது ஆகியவற்றுக்கு இத்திரைப்படங்கள் உற்சாகமூட்டும் பங்கை ஆற்றுகின்றன.

திபெத்திய விவசாயிகளும் ஆயர்களும் திரைப்படங்களைப் பார்க்க முடிவதற்கு, சீன அரசு பின்பற்றும், திரைப்படத்தை கிராமப்புறத்துக்கு கொண்டு செல்லும் திட்டப்பணி காரணமாகும். கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டுகளில் சீனக்கிராமவாசிகளின் பண்பாட்டு வாழ்க்கையைச் செழுமையாக்கும் வகையில், "2131" என்னும் சீன அரசின் திட்டப்பணி துவங்கியுது. அதாவது, 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில், நாடு தழுவிய ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் திங்களுக்கு ஒரு முறை திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

1  2