
1998ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம், இத்திட்டப்பணியைச் செயல்படுத்தத் துவங்கியது. திபெத் தன்னாட்சிப் பிரதேச திரைப்பட நிறுவனம் விரைவாகச் செயல்பட்டு, மேலதிகமாக திரைப்படங்களைக் காண்பிக்கத்துவங்கியது. திபெத் இன விவசாயிகளும் ஆயர்களும் திபெத் மொழியில் தயாரான திரைப்படத்தை மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எவ்வளவு திரைப்படங்கள் திபெத் மொழியில் தயாரிக்கப்பட முடியுமோ அவ்வளவு திரைப்படங்களை அவர்கள் பார்க்க முடியும். இது பற்றி திபெத் தன்னாட்சிப் பிரதேச திரைப்பட நிறுவனத்தின் மேலாளர் பெர்பஜிங்செங் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளில் ஆயிரம் திரைப்படங்கள் திபெத் மொழியாக்கப்பட்டன. அவற்றில், முழு நீள திரைப்படம், அறிவியல் கல்வி அறிவுக்கான திரைப்படம் ஆகியவை அடங்கும்.
திரைப்படங்கள் திபெத் மொழியாக்கப்பட்ட பின், சிறப்பு பணியாளர்கள் தொடர்புடைய சாதனங்களுடன் ஒவ்வொரு கிராமமாகச் சென்று அவற்றைக் காட்டுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்கு அலுவல் பயிற்சி வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் திரையரங்குகள் கட்டப்பட்டுள்ளன. இப்போது, திபெத்தின் பல்வேறு இடங்களில் இத்தகைய சுமார் 500 அரங்குகள் கட்டப்பட்டுள்ளன.

திபெத் நிலப்பரப்பு விசாலமானது. பனி மலைகள் தொடராக உள்ளன. போக்குவரத்து சாலைகள் நீண்டவை. திரைப்படங்களைக் காண்பிக்க, பணியாளர்கள், வழக்கமாக வாகனங்கள் மூலம் பல நாட்கள் பயணம் செய்த பிறகே, ஒரு கிராமத்தை அடைய முடியும். நிமஜிலேங் என்பவர், லாசா நகரின் வட புறநகரில் டாஜிங் மாவட்டத்தில் திரைப்பட அரங்கின் பொறுப்பாளர். அவர் கூறியதாவது:
"எங்கள் மாவட்டத்தின் பல கிராமங்கள், ஒதுக்குப்புறமாக உள்ளன. நெடுஞ்சாலை இல்லாத மலைப்புறத்தில், திரைப்படம் காட்டும் சாதனங்களை, யாக் எருதுகள் அல்லது குதிரைகளின் முதுகுகளில் வைத்து கொண்டு போய், மிக புதிய திரைப்படங்களை விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்குக் காண்பிக்கின்றோம். ஒரு கிராமத்தில், வழக்கமாக அறிவியல் கல்வி அறிவுக்கான திரைப்படத்தையும் முழு நீள திரைப்படத்தையும் காண்பிக்கின்றோம்." என்றார்.
பண்பாட்டு விருந்து போலவே, திரைப்படம் என்பது, திபெத்திய விவசாயிகள் ஆயர்களின் வாழ்க்கையை செழுமையாக்குகின்றது. சிதறி வாழ்வதினால் திரைப்படம் காண்பிக்கப்படும் போது, விவசாயிகளும் ஆயர்களும் நான்கு பக்கம் எட்டு திசைகளிலிருந்து வருவார்கள். சிலர் குதிரை சவாரி செய்தும், சிலர் நடந்தும் வருகின்றனர். மோட்டார் வாகனத்தின் மூலம் வருவோரும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், எத்தனை கிராமங்களுக்குச் சென்றோம். எவ்வளவு அதிகமான திரைப்படங்களைக் காண்பித்தோம் என்பது தம் நினைவில் இல்லை. ஆனால், ஒரு கிராமத்தை அடைந்ததும், விவசாயிகளும் ஆயர்களும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். சில வேளைகளில், ஒரு திரைப்படம் முடிந்ததும், மீண்டும் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விடுத்த கோரிக்கைக்கிணங்க, நாங்கள் இதை மீண்டும் காண்பித்தோம் என்று நிமஜிங்லேன் சொன்னார்.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்து திரைப்பட நிறுவனத்தின் மேலாளர் பெர்பஜிங்செங் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் திபெத்தின் திரைப்படம் காட்டுவதற்காக சீன அரசு பல கோடி யுவான் ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணத்தால், திரைப்படம் காட்டும் சாதனங்கள் பழுதடையும் பிரச்சினை தீர்ந்து விட்டது. இப்போது ஒவ்வொரு நிலையத்திலும் ஒரு வாகனம் உண்டு. பணியாளர்கள் வெளியே போவதற்கு வசதியாயிருக்கின்றது என்றார். 1 2
|