 ராஜா.....தற்போது சீன சமூகத்தில் மருத்துவ சிகிச்சை செலவு பற்றி கவனம் செலுத்தப்படுகின்றது அப்படிதானே?
கலை......ஆமாம். சீன சுகாதார அமைச்சகம் அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. கருத்தறியப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர் மருத்துவ சிகிச்சை செலவு குடும்பத்தின் மொத்த செலவில் பெரும் பங்கு வகிப்பதாக கூறினர். மேலும் அதிகமான மருத்துவ சிகிச்சை செலவினால் நோயாளிகளின் சிகிச்சையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

ராஜா....அப்படியானால் பிரச்சினையை தீர்க்க சீன அரசு எந்தந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது? அதன் பயன் எப்படி?நமது நேயர்களுக்கு கொஞ்சம் விளக்கி கூறலாமா?
கலை.....இது பற்றி சொல்வதற்கு முன் ஒரு உதாரணத்தை பார்ப்போமா?
ராஜா.....சொல்லுங்கள்.
கலை.....வட கிழக்கு சீனாவின் ஹெலூங்சியான் மாநிலத்தில் ஒரு புற்று நோயாளி மருத்துவ மனையில் 2 மாதங்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு 50 லட்சம் யுவான் செலவானது. இருந்த போதிலும் மரணத்திலிருந்து அவர் தப்ப முடிய வில்லை. இந்த உதாரணம் சீன செய்தியேடுகளில் வெளியிடப்பட்ட பின் சீன சமூகத்தில் மாபெரும் எதிரொலிப்பு எழுந்தது. இது அன்றாந்த வாழ்க்கையில் மிகவும் மோசமான உதாரணமாக இருந்த போதிலும், சீனாவில் டாக்டரை பார்ப்பதற்கு மிக அதிகமாக செலவழிக்க வேண்டும் என்ற பிரச்சினை மக்களுக்கு பெரிதாகத் தெரிகிறது.
1 2
|