• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-21 08:58:49    
மருத்துவ கட்டண பிரச்சினை

cri

ராஜா.......இது பற்றி நான் ஓரளவு கேள்விப்படேன். சில பத்து லட்சம் யுவான் மருத்துவ செலவு சாதாரண மக்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயமாகும். சீன மக்கள் தமது அதிகமான மருத்துவ செலவு பற்றி கவலைபடுகின்றனர்.

கலை.....நீங்கள் சொன்னது சரிதான். பெய்சிங் நகரில் வசிக்கும் கோ என்ற முதியவர் இப்போது 50 வயதுக்கு மேற்பட்டவர். அவருடைய கருத்தை கேட்ட பின் நாம் வவாதிக்கலாம்.

எனக்கு வருமானம் அதிகமில்லை. வாழ்க்கையில் அதிகப் பணம் சேமிவில்லை. இப்போது என் உடல் நிலை அவ்வளவு நன்றாக இல்லை. நோய்வாய்பட்டால் அதிகமான மருத்துவ செலவை எப்படி சமாளிக்க முடியும் என்று முதியவர் கோ கவலைபட்டு பேசினார்.

ராஜா.....முதியவர் கோ சொன்னது சாதாராண மக்களிடையே காணப்படும் சூழ்நிலையாகும். இந்த பிரச்சினையை தீர்க்க சீன அரசு முயற்சி செய்ய வில்லையா?

கலை.....அப்படியில்லை. அரசு பல வழிமுறைகளை சிந்தித்து சோதனை முறையில் நடைமுறைபடுத்தியுள்ளன. இந்த வழிமுறைகளில் பல சோதனை முறையில் ஆராயப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பெய்சிங், சிங்கியான், செஜியாங் முதலிய இடங்களில் செலவு குறைவான மருத்துவ மனை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மனைகள் அரசின் நிதி உதவியுடன் குறைந்த விலையில் மருந்தை நோயாளிகளுக்கு விநியோகிக்கும் முடிந்த அளவில் நோயாளிகளின் சுமையைக் குறைக்க முயற்சிக்கப்படும்.

ராஜா.....எனக்கு புரிந்தது. இந்த சோதனை முயற்சியில் பெய்சிங் மாநகரின் முதலாவது மருத்துவ மனையான சாந்தி மருத்துவ மனையின் தலைவர் வுவாலீங் அம்மையார் அவர்களின் மருத்துவ மனையின் நிலைமை பற்றி கூறினார்.

ஒரேமாதிரி பயன் உள்ள மருந்துகளில் மிக குறைந்த விலையுள்ள மருந்தை நாம் தேர்வு செய்கின்றோம். இந்த மருந்துகள் அரசால் விதிக்கப்பட்ட வழிமுறை மூலம் கிடைத்தன. இந்த மருத்துவ மனையில் நோயாளிகளின் சுமையை குறைக்க நாம் முயற்சி செய்கின்றோம் என்றார் அவர்.

கலை.....சாந்தி மருத்துவ மனையில் இந்த முயற்சி மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கு குறிப்பிட்ட சலுகையும் வழங்கப்படுகின்றது. நகரில் வேலைவாய்ப்பினை இழந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பொருளாதார வசதியற்ற நோயாளிகள் மருத்துவ மனையில் டாக்டரை பார்க்கும் போது உரிய சான்றுகளைக் காட்டி சலுகை பெற முடியும். அதேவேளையில் ஒரு தடவை மட்டுமே பயன்படக் கூடிய மருத்துவ கருவிகள் குறைக்கப்படும். நோயாளிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று தங்கியிருக்கும் நாட்களில் அன்றாட வாழ்க்கை வசதிப் பொருட்களை வீட்டிலிருந்து கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையை நோயாளிகள் வரவேற்கின்றனர்.


1  2