• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-23 14:32:21    
வறுமை ஒழிப்பில் அரசு சாரா அமைப்புகளின் உதவி

cri

ராஜா.......வறுமை ஒழிப்பு துறை சீன அரசின் அலுவல்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கலை.......இது மட்டுமல்ல சீனாவின் அரசு சாரா அமைப்புகளும் பங்கெடுத்துள்ளன.

 

ராஜா...... இந்த அமைப்புகள் ஈடுபட்டுள்ள 30 வறுமை ஒழிப்பு நிகழ்ச்சிகள் அண்மையில் உலக வங்கியின் ஆதரவை பெற்றுள்ளன.

கலை....ஆதரவு பெறுவது தவிர, உலக வங்கி சீனாவின் பல நிறுவனங்களுடன் கூட்டு வைக்கும் செயல் திட்டத்திலும் 30 வறுமை ஒழிப்புத் திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ராஜா......இது மட்டுமல்ல சில நாட்களுக்கு முன் பெருமளவில் வறுமை ஒழிப்புக்கான அரசின் நிதி முதலீடுத் திட்டத்தில் ஒத்துழைப்பு கூட்டாளிகளாக 6 அரசு சாரா அமைப்புகளை சீன அரசும் தெரிவு செய்துள்ளது.

கலை......உலக வங்கியிடமிருந்து வறுமை ஒழிப்புத் துறைக்கு ஆதரவு பெறுவது தவிர, அரசு சாரா அமைப்புகளுடன் சீன அரசு செய்துள்ள முயற்சிகளை மக்கள் புரிந்து கொண்டால் சர்வதேச அமைப்புகள் மற்றும் அரசு சாராடாடம் இருந்து இத்தகைய ஆதரவையும் உதவியையும் பெறுவதில் இன்னல் இருக்காது.

ராஜா.....ஆமாம். அரசு சாரா அமைப்புகள் வறுமை ஒழிப்புக்கென மேற்கொண்ட முயற்சி புதிய முன்னேற்றம் அடையும். அல்லவா?

கலை....கண்டிப்பாக, இந்த துறையில் முன்னேற்றம் காணப்படும்.

ராஜா.....வறுமை ஒழிப்பு துறையில் சர்வதேச அமைப்புகள் சீன அரசு சாரா அமைப்புகளுக்கு உதவுவது மிக முக்கிய பகுதியாகும்.

1  2