கலை....ஆமாம். அவற்றின் முயற்சிக்கு உலக வங்கி ஆதரவு அளிப்பது ஒரு உதவி முறையாகும். உடன்படிக்கையின் படி, எதிர் காலத்தில் உலக வங்கியும் தொடர்புடைய சீன வாரியங்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவங்களை திரட்டி தெரிவு செய்யப்பட்டுள்ள 30 வறுமை ஒழிப்புப் பணிகளுக்கு தொடரச்சியாக நிதி கிடைக்க ஏற்பாடு செய்யும்.
ராஜா.....இந்த முயற்சியை உலக வங்கியின் சீன கிளை இயக்குனர் து தாய் வெய் உயர்வாக பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது
இந்த நிகழ்ச்சிகள் என்பதில் ஆழமாகப் பதிந்து விட்டது. இவற்றில் சில திபெத் சிங்கியான் போன்ற வெகு தொலைவிலுள்ள எல்லைப் பகுதிகளின் சில நகரங்களில் செயல்படுத்தப்படும். ஒலிம்பிக் திட்டப் பணிக்கான அமைப்பாளர்கள் மேற்கொண்டுள்ள பணிகளைப் பார்த்தால், இந்த நிகழ்ச்சிகளுக்கு நிதி ஆதரவு வழங்க வேண்டும். அதேவேளையில் சீனாவில் பல அரசு சாரா அமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உதவிப் பணிகளில் ஈடுபடுவதை மேலும் கூடுதலான மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம் என்றார் அவர்.
கலை......சமூக சக்திகளின் ஆதரவின் மூலம் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் ஒரு முயற்சியாக சீனாவின் குவெச்சோ மாநிலத்தில் வாழ்கின்ற பெண்கள் தற்சார்பு மூலம் கோடைகாலத்திலும் இலையுதிர் காலத்திலும் சமூகத்திற்கு மாசுபடாமல் இருக்கும் காய்கறி பயிரிடும் மாதிரி மண்டலத்தை உருவாக்குவதாகும். இந்த தொழில் முயற்சிக்கு உலக வங்கி உள்ளிட்ட அமைப்புக்கள் 30 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள துவக்க நிதி வழங்கியுள்ளது.
ராஜா....இந்த முயற்சி பற்றி கூடுதலாக சொல்லலாமே.
கலை......ஆமாம். நான் விபரமாக சொல்கின்றேன். இதை கேட்டு நீங்கள் எதாவது கருத்து சொல்லுங்கள்.
கலை.... லீ குவெய் லியான் என்னும் அம்மையார் இந்த முயற்சிக்குப் பொறுப்பானவார். உள்ளூரில் உள்ள சிறுபான்மை தேசிய இன கிராமத்தில் கத்தரிகாய், மிளகாய், தக்காளி முதலிய காய்கறிகளை பயிரிட அங்கு வாழ்கின்ற பெண்களுக்கு உதவிட இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த காய்கறிகள் கோடைகாலத்திலும் இலையுதிர் காலத்திலும் அமோக அறுவடை தரும் என்ற நம்பிக்கை உண்டு. 1 2
|