• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-30 16:47:03    
வறுமை ஒழிக்கும் முயற்சி

cri

கலை......வழமை ஒழிப்பு பற்றி லீ குவெய் லியன் அம்மையார் கூறியதாவது

இந்த கிராமம் குவெய் சோ மாநிலத்தின் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாகும். முன்பு ஒரு காலத்தில் நெல் மக்காச் சோளம் மட்டுமே இங்கு விளைந்தது. ஆண்டுக்கு தனி நபர் நிகர வருமானம் 598 யுவான் மட்டும் பெறப்பட்டது. காய்கறி பயிரிடும் முயற்சி நடைமுறைக்கு வந்த பின் தனி நபர் நிகர வருமானம் 1600 யுவானை அடையலாம். மக்கள் வறுமையிலிருந்து விடுதலை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றார் அவர்.

ராஜா.....லீ அம்மையார் வழங்கிய தகவலின் படி, எதிர்காலத்தில் உள்ளூரில் காய்கறி பயிரிடும் திட்டத்தை விரிவாக்க நிதி திரட்ட அவர்கள் மேலும் முயற்சி மேற்கொள்வார்கள் என்று தெரிந்து கொண்டேன். சகோதரிகளின் முயற்சி மூலம் அங்கு வறுமை ஒழிப்புத் திட்டம் நிறைவேறுவது உறுதி என்பதில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை.

கலை......உங்கள் கருத்தை ஒப்பு கொண்டுள்ளேன். வறுமை ஒழிப்பு முயற்சி ஈடுபட்டுள்ள அரசு சாரா அமைப்புகளுக்கு சீன அரசு ஆதரவளிப்பது சீனாவில் வறுமை ஒழிப்பு பணியில் இன்னொரு முக்கிய வடிவமாகும்.

ராஜா....கடந்த சில ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம்

உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனை செய்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 9 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. ஆனால் நகரங்கங்களுக்கும் கிராமங்களுக்குமிடையில் இடைவெளியும், ஏழை பணக்காரர்களிடையிலான இடைவெளியும் தொடர்ந்து பெரிதாக இருக்கின்றது.

1  2