கலை.....இது உண்மை. உலக வங்கியின் புள்ளிவிபரத்தின் படி, நாளுக்கு தனி நபர் ஒரு அமெரிக்க டாலர் என்ற சர்வதேச ஏழை வரையறையை கணக்கிட்டுப் பார்த்தால் தற்போது சீனாவில் ஏழை மக்களின் தொகை சுமார் 20 கோடியாகும். முன்பு வறுமை ஒழிப்பு பணி அரசின் வழிக்காட்டலின் கீழ் நடைபெற்றது. ஆனால் இந்த வழி முறை மூலம் அரசின் செயல்பாட்டில் பல பற்றாக்குறைகள் தெரிந்தன.
ராஜா......சீன அரசவையின் வறுமை ஒழிப்பு அலுவலகத்தின் அதிகாரி வூ ச்சுன் என்ன சொல்கிறார் தெரியுமா?
சீனாவில் பெருமளவில் ஏழை மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவுவதில் நிறைய நிதி தேவைபடுகின்றது. அரசின் ஒதுக்கீடு போதாது. குறிப்பாக வறுமை ஒழிப்பு வடிவத்தில் அரசு மட்டும் ஈடுபடுவது போதாது என்றார் அவர்.
கலை.......தற்போது சீனாவில் வறுமை ஒழிப்புக்கான நிதியில் 40 விழுக்காடு ஏழை மக்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த முயற்சியில் ஊழலும் நிலவுகின்றது. இதன் விளைவாக நிதி உதவியில் பெரும் பகுதி உதவப்படும் மக்களுக்கு போய்ச் சேர்வதில்லை. இதனுடன் ஒப்பிட்டு பார்த்தால் அரசு சாரா அமைப்புகள் வறுமை ஒழிப்பில் ஏழை மக்களுக்கு மேலும் நெருங்கிய தொடர்பு கொள்ள முடியும். அவை ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி தொகையை வழங்க முடியும். உற்பத்தியிலும் செயல்படுத்துவதிலும் அவை வறியவர்களுக்கு உதவ முடியும்.
ராஜா.....எனக்கு புரிந்தது. ஆகவே கடந்த சில ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் அரசு சாரா அமைப்புகளுக்கான ஆதரவை சீன அரசு விரிவாக்கியுள்ளது.
கலை.....ஆமாம். கடந்த டிசெம்பர் திங்களில் ஏல இலக்கு என்ற முறையில் சீனாவின் சியாங்சி மாநிலத்தில் ஒரு கிராம நிலை வறுமை ஒழிப்பு திட்டத்தை சீன அரசு முன்வைத்துள்ளது. சற்றுக்காலத்தில் இந் இலக்கு என்ற முறையின் விளைவு வெளியே அறிவிக்கப்பட்டது. சீனாவின் சர்வதேச அரசு சாரா அமைப்பின் ஒத்துழைப்பு முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 6 அரசு சாரா அமைப்புகள் இந்த திட்டத்திற்கான அரசின் நிதி நிர்வாக உரிமையை பெற்றுள்ளன.
ராஜா......எதிர்வரும் ஜுன் திங்களில் சீன அரசு இரண்டாவது முறையாக இலக்கு என்ற முறையை மேற்கொள்ளும். அப்போது மேலும் கூடுதலான அரசு சாரா அமைப்புகள் சீன அரசுடன் ஒத்துழைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களில் பங்கெடுக்கும் என்று நான் நம்புகின்றேன். 1 2
|