
வா இனம்
வா இன பாடகர் ஐ மங் பற்றி விவரிக்கும் கட்டுரை இதோ. பார்ப்பதற்கு கருப்பான ஐ மங், உயரமானவர் அல்ல. அவரது நீண்ட தலை முடி, காற்றுடன் பறக்கின்றது. இரு கண்கள் ஒளிவீசுகின்றன. சிறு வயதிலிருந்தே ஐ மங், பாட விரும்பினார். பெரிய மலைகளை நோக்கி செல்லும் மேய்ச்சல் மாடுகளிடையே அவர் பாடினார். 1996ம் ஆண்டு, பெய்சிங் திரைப்படக்கலை கல்லூரியில் சேர்ந்து, குரல் இசையை மேலும் படிக்க நினைத்தார். ஆனால், அவரது விருப்பத்துக்குப்புறம்பாக, நடிப்புக்கலைத் துறையில் சேர்க்கப்பட்டார். இரண்டு ஆண்டு காலம் நடிப்புக்கலை கற்றுக்கொண்ட பின், இதர மாணவர்களைப் போலவே நடிகராக இருக்கவில்லை. மீண்டும் பாடத் துவங்கினார். அவர் ஒரு மிதி வண்டியில் சென்று பெய்சிங் நகரின் பெரிய மற்றும் சிறிய மதுவகங்களில் விருந்தினர்களுக்காகப் பாடுகின்றார். தனது பாட்டுகளை பிறர் கேட்டு மகிழ வேண்டும் என தாம் விரும்புவதாகவும், இறுதியில் தாம் சிறப்பு பாட்டுத் தொகுதியை தயாரிப்பதற்கு துணை புரிய வேண்டும் என நினைப்பதாகவும் ஐ மங் கூறினார்.
"பெய்சிங், ஒரு மாநகரம். பண்பாட்டு வளம் மிக்கது. சாலையில் புதிய விஷயங்களைக் காணலாம். ஆனால், யூனான் மாநிலத்தின் பெரிய மலைகளில் வாழ்ந்தால், ஓராண்டு அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அவற்றை அறிய முடியும். பெய்சிங்கில், பல தேசிய இனங்களின் பண்பாடு உள்ளா! ஒரு தேசிய இனத்தின் பண்பாடு இங்கு அங்கீகரிக்கப்பட்டால், சீனாவின் இதர இடங்களும் இதை ஏற்றுக்கொள்ளும்" என்றார்.
1 2
|