
ஐ மங்
பெய்சிங்கில் குளிர்காலத்தில் மிகவும் கடுமையான குளிர். ஐ மங் மிதி வண்டியில் சாலையில் போகும் போது, அடிக்கடி, கைகால் விறைத்து போகும். ஆனால், வாழ்க்கைத் தேவைக்காகவும், வெவ்வேறான மதுவகங்களும் பாடகருக்கு விடுத்த கோரிக்கைக்கு ஏற்பவும், பாப் இசை குரல், தேசிய இனப்பாணி மற்றும் மேலை நாட்டுப்பாணியில் பாட வேண்டும். ஒருமுறை, அவர் தேசிய இனப் பாணியில் தாம் தயாரித்த ஒரு பாட்டைப் பாடிய போது, பிரபலமான தயாரிப்பாளர் ஒருவர் அப்பாடலைக் கேட்டு ரசித்தார். நீங்கள் வா இன பாடகரின் தனிச்சிறப்பியல்பைக் காட்ட வேண்டும் என்றும், நாட்டுப்புற பாடல்களை இயற்றுவதில் முழுமனதுடன் ஈடுபட்டு, கடந்த காலத்தில் மாட்டு முதுகில் அமர்ந்து பாடும் உணர்வை மீட்க வேண்டும் என்றும் அவர் ஐ மங்கிடம் கூறினார்.
அவரது பேச்சைக் கேட்டு ஐ மங் உற்சாகம் பெற்றார். வா இனத்தவர்களிடையே நீண்டகாலமாக பரவி வரும் நாட்டுப்புறப்பாடல்களை மாற்றியமைத்து இயற்றினார். பின்னர், நவீன அம்சங்களை சேர்த்தார். இதற்கிடையில், நாட்டுப்புறப்பாடலை பாடும் ஐ மங்கிற்கு சாப்பிட பணமில்லாது வாழ்க்கை இன்னலில் சிக்கிக் கொண்டார். அவர் கூறியதாவது:

ஐ மங்
"அப்பொழுதெல்லாம், தாம் படித்த நடிப்புக்கலை பயன்தருவதாக கூறினார். சில வேளையில், பிச்சைக்காரராக நடிக்க வேண்டும். வாழ்க்கையை கவனிக்க வேண்டும். பெய்சிங்கில் தங்கியிருக்க வேண்டும் என்றால், கடினம் என்பதற்கு அஞ்சக்கூடாது. சாப்பாடு இல்லாத நேரத்தில், தன்னை தானே தேற்றிக்கொள்ள வேண்டும். இப்போது நான் வாழ்க்கையை நேரில் உணர்ந்து கொள்கின்றேன் என்று தனக்குச் சொல்ல வேண்டும்" என்றார், அவர்.
2000ம் ஆண்டில், வெளிப்புற விளையாட்டு கிளப் நடத்தும் உரிமையாளர் தத்செயலாக ஐ மங்கின் பாட்டொலியைக் கேட்டு ரசித்தார். சிறுவராக இருந்த காலத்தில் யுன்னான் மாநிலத்தின் உயர் மலைகளில் வசித்ததை அறிந்த இவ்வரிமையாளர், தமது கிளப்பில் சேர விரும்புகின்றீர்களா என்று ஐ மங்கை கேட்டுக் கொண்டார். மலைகள் மீது ஆழ்ந்த உணர்ச்சி கொண்ட ஐ மங், சோதனை முறையில் செய்ய முடிவு செய்தார்.
Ji Ta என்னும் ஒரு வகை இசைக்கருவியுடன் ஐ மங், புதிய துறையில் நுழைந்தார். வெளியே அவர், பாடுகின்றார். அவரது பாட்டுகளினால் வெளி விளையாட்டுக்களில் ஈடுபடுவோரிடையே படிப்படியாக ஐ மங் புகழ் பெற்றுள்ளார். 2002ம் ஆண்டு, தமது முதலாவது தனிநபர் பாட்டு தொகுதியை ஐ மங் வெளியிட்டார். தாம் தயாரித்து பாடிய 5 பாடல்கள் இதில் இடம் பெறுகின்றன. இதற்காக அவர் தற்பெருமைப்பட்டு மகிழ்ந்தார். ஏனெனில், கடந்த பல்லாண்டுகளாக பாடுபட்டு வந்ததன் விளைவு, இது.

ஐ மங்
மேலும் ஐ மங்கிற்கு மகிழ்ச்சி தருவது என்ன என்றால், அவரது பாட்டொலி அவருக்கு காதலையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஐ மங்கின் இசையில் மூழ்கியிருந்த சிங்கியாங் பெண்மணி லு லு, ஐ மங்கின் வாழ்க்கையில் நுழைந்தார். அவரது காதலியாகினார். லு லு கூறியதாவது:
"சில வேளையில் நான் மனநிம்மதியில்லாமல் தவித்தேன். ஆனால், அவரது பாட்டொலியைக் கேட்டதும் கவலை குலைந்து விட்டது. அவரது வா இன பாடலில் எனக்கு சிறப்பு பிரியம். வா இன மொழியில் பாடப்படும் அவரது பாடல்களை கேட்டுப்புரியவில்லை என்ற போதிலும், இப்பாட்டொலியில் மூழ்கி இருப்பேன்" என்றார்.
லு லு, தம் விருப்பப்படி வா இன பாடலைப் பாடினார். இப்பாடலில் கவலை உணர்வு அடங்கியது. பாடுவதில் ஐ மங், தனக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்றும், தானே கேட்டு கேட்டு பாட முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ மங்
இப்போது, ஐ மங், பெய்சிங்கில், தேசிய இன மணம் கவழும் மதுவகம் ஒன்றை நடத்துகின்றார். எ மங் என்னும் இம்மதுவகம், பெய்சிங் நகரின் வடப்பகுதியிலுள்ள ஒரு பூங்காவனத்தில் அமைந்துள்ளது. உள்புற அலங்காரம், அவரால் வரைந்து தயாரிக்கப்பட்டது. வா இனத்தின் பண்டைக்கால கற்பாறை ஓவியம், மர முரசு, மூங்கியால் ஆன விளக்கு உறை, வா இன மலை கிராமம் பற்றிய காட்சித்தல் படம் முதலியவை, இந்த மதுவகத்தில் அரங்கரிக்கின்றன. சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மதுவக அறையில், ஐ மங் பாடும் தேசிய இனத் தனித்தன்மை மிக்க பாட்டொலியை கேட்டுக்கொண்டே, பலர் வார இறுதியில் நன்றாக ஓய்வு எடுக்கின்றனர். மதுவகத்தில் பணிபுரியும் வா இன பெண் ஒருத்தி பேசுகையில், ஐ மங்கின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கையில், தம் ஊர் பற்றி நினைவுக்கு வருகின்றது. பச்சை நிற பெரிய மலை, மஞ்சள் எண்ணெய் வித்து செடிபூங்கள், பறவைகளின் சத்தம் முதலியவை தமது கண்களுக்குத் தென்படுகின்றன என்றார்.
இப்போது மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்வதாக ஐ மங் சொன்னார். மதுவகம் நடத்துவது தவிர, தாம் விரும்பும் நூல்களைப் படிக்கின்றார். ஆண்டுதோறும் ஊர் திரும்பி, நாட்டுப்புற இசையை ச் சேகரித்து, நாட்டுப்புறப்பாடல் இயற்றப்போவதாக ஐ மங் தெரிவித்தார்.
பெய்சிங்கில் ஐ மங் புத்தாண்டுகளாக தங்கியிருக்கின்றார். தமது பாடலை விரும்புவோருக்குத் தொடர்ந்து பாட, பெய்சிங்கில் தங்குவார் என்றார், அவர். 1 2
|