• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-11 17:04:33    
சீன மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி

cri

கலை..........சீன மூலிகை மருந்து விவசாயிகளிடையில் மிகவும் வரவேற்கப்பட்டதால், கடந்த சில ஆண்டுகளில் ஸச்சான் மாநிலத்தின் மாவட்ட வட்ட மற்றும் கிராம நிலை சீன மூலிகை மருத்துவ சேவை தொடரமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மாநிலத்தின் 80 விழுக்காட்டுக்கு மேலான மாவட்டங்களில் சிறப்பு மூலிகை மருத்துவ மனைகள் நிறுவப்பட்டுள்ளன. 90 விழுக்காட்டு வட்ட மருத்துவ நிலையங்களில் சீன மூலிகை மருத்துவ துறையும் மூலிகை மருந்து மையம், அக்குபஞ்சர் சிகிச்சை பிரிவு ஆகியவை இணைக்கப்படுகின்றன. மூலிகை மருந்து மையத்தில் பல்வகை மூலிகை மருந்து பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு பாதுகாப்பாகவும் பயனுள்ள முறையில் சேவை புரிகின்றன. தற்போது ஸச்சான் மாநிலத்தின் கிராமப்புறத்தில் மூலிகை மருத்துவ சிகிச்சை சேவை கிராமப்புற மருத்துவ சேவையில் 30 விழுக்காடு வகிக்கின்றது.

ராஜா.......சாதனங்களை பார்த்தால் ஸ்ச்சான் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது. அதேவேளையில் திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிக்கும் துறையை ஸச்சான் மாநில அரசாங்கம் அலட்சியம் செய்ய வில்லை. 1998ம் ஆண்டு முதல் மொத்தமாக 1200க்கும் அதிகமான மூலிகை மருத்துவத் தொழில் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் சேவை புரியும் டாக்டர்களிடையே மூலிகை மருத்துவ கல்வி பரவலாக்கபடுகின்றது.

1  2  3