ராஜா.........கிராமப்புறத்தில் சீன மூலிகை மருத்துவ துறையின் வளர்ச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில் சீன மத்திய அரசின் நிதி துறை 10 கோடி யுவான் செலவிட்டு மேற்கு மற்றும் நடுப் பகுதியிலுள்ள 7 மாநிலங்களின் பின்தங்கிய மாவட்டங்களிலும் சிறுபான்மை தேசிய இன தன்னாட்சி மாவட்டங்களிலும் எட்டாத் தொலைவில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களிலும் ஆய்வு முறையில் மூலிகை மருத்துவ மனையின் அடிப்படை சாதனங்களை புதுப்பித்துள்ளது.

கலை...........அடுத்த 3 முதல் 5 வரையான ஆண்டு காலத்தில் சீன மத்திய அரசு நிதி துறை தொடர்ந்து முதலீட்டு அளவை அதிகரித்து நீங்கள் குறிப்பிட்ட மூலிகை மருத்துவ மனைகளின் அடிப்படை சாதனங்களையும் சாதன பொருட்களையும் மேலும் முழுமையாக்கும். ராஜா இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
ராஜா......எனக்கு நம்பிக்கை உண்டு. சீன மூலிகை மருந்து மக்களிடையே பரவலாக்கப்பட்டதுடன் மூலிகை மருந்து பயன்பாடு சீனாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் மேலும் கூடுதலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் ஐயம் எதுவுமில்லை. 1 2 3
|