• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-18 11:27:27    
நகரங்களில் பணி புரிகின்ற விவசாயிகளுக்கு அறிவூட்டுவது

cri

1981ம் ஆண்டில் மனித குலத்தில் எச்ஐவி கிருமி காணப்பட்டது முதல் இதுவரை குறுகிய 24 ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த முடியாத அச்சுறுத்தலுடன் மனித குல ஆரோக்கியத்தை பாதிக்கும் கடும் நோயாக எய்ட்ஸ் உருவெடுத்துள்ளது. இதைத் தடுத்து சிகிச்சை அளிக்கும் வழி முறைகளை கண்டுபிடிக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் மருத்துவ அறிஞர்கள் விடா முயற்சியுடன் ஆராய்ந்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் சிகிச்சை முறை கண்டிபிடிக்கப்படவில்லை. 2005ம் ஆண்டில் மட்டும் உலக முழுவதிலும் 31 லட்சம் மக்களை எய்ட்ஸ் பலி கொண்டது.

இந்த நிலைமையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய அறிவை பிரச்சாரம் செய்து மக்களிடையில் விழிப்புணர்வை அதிகரிப்பது என்பது எய்ட்ஸ் நோய் தலைவிரித் தாடுவதைத் தடுக்கும் சிறந்த வழிமுறையாகும். இந்த பிரச்சார பணியில் சீனாவும் மிகவும் கவனம் செலுத்துகின்றது. இந்த முயற்சியில் குறிப்பாக நகரங்கள் வந்து வேலை செய்யும் விவசாயிகளிடையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய அறிவை பிரச்சாரம் செய்வதற்கு சீனா முக்கியத்துவம் தருகின்றது.

அண்மையில் விவசாயிகள் அடிக்கடி பயணம் செய்யும் புகை வண்டி நிலையகங்களில் அவர்களுக்காக எய்ட்ஸ் நோய் பற்றிய பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. பலரின் அக்கறையை இது ஈர்த்துள்ளது. 20க்கும் அதிகமான நிபுணர்கள் தகவல் மேசையின் முன்னால் உட்கார்ந்த வண்ணம் மக்களின் கேள்விகளுக்கு விடை அளித்தனர். பிரச்சாரத் தொண்டர்கள் கருத்துக் கணிப்புத் வினாத் தாள்களையும் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய தகவல்களைக் கொண்ட துண்டு வெளியீடுகளையும் வருவோருக்கும் போவோருக்கும் விநியோகித்தனர். தவிர, பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் சுமார் 100 மரப் பலகைகளில் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய அறிவியல் அறிவு விளக்கமாக வைக்கப்பட்டுள்ளன.

புகை வண்டியிலிருந்து இறங்கிய விவசாயி ஒருவர் அவருடைய பொருட்களை தரையில் வைத்து விட்டு கருத்து கணிப்பு பட்டியலில் வினாகளுக்கு விடையளித்தார். அத்துடன் தகவல் மேசைக்கு வந்து பல பிரச்சார தகவல்களை வாங்கினார். நமது செய்தியாளர் அவருடன் பேசினார்.

நான் சீனாவின் ஹோநான் மாநிலத்திந் சான் சியூ நகரிலிருந்து வந்தேன் என்று விவசாயி பதில்.

எதற்காக இங்கே வந்தீர்கள். எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பெறுவது பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று செய்தியாளர் கேட்டார்.

எய்ட்ஸ் நோய் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. வானொலி மற்றும் தொலை காட்சி மூலம் கேட்டு கொஞ்சம் அறிந்தேன். பெய்சிங் வநடைந்ததுடன் இந்த பிரச்சார நடவடிக்கையில் கலந்து கொண்டது எனது அதிர்ஷிடம் என்று விவசாயி பதிலளித்தார்.

எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றி இந்த விவசாயி கூறிய பதிலை பார்த்தால் அவர் போன்ற விவரம் தெரியாத விவசாயி சீனாவில் அதிகமாக உள்ளது தெரிய வரும். தற்போது 12 கோடி விவசாயிகள் நகரங்களில் வந்து வேலைசெய்து அவர்கள் தெரிந்து கொண்ட கல்வியறிவு மிக குறைவு. எப்படி எய்ட்ஸ் நோய் தடுத்து சிகிச்சை பெறுவது என்று தெரியாது. அவர்களிடையில் 20 வயது முதல் 40 வயது வரையான இளைஞர்களின் விகிதம் 65 விழுக்காடு வகிக்கின்றது. அவர்களில் பெரும்பாலோர் திருமணம் செய்யாதவர்கள் அல்லது மனைவியை விட்டுப் பிரிந்து நகரில் வேலைசெய்பவர்கள் கிராமப்புறத்திலிருந்து நகருக்கு வந்த பின் பசுமையான சூழ்நிலை மற்றும் உடல் தேவை காரணமாக அவர்களின் பாலுறவு கண்ணோட்டத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. பாலுறவு செயல் கட்டுப்பாட்டை மீறுவது உண்டு. அவர்கள் இடம் பெயர்வதும் அதிகம். ஆகவே அவர்களுக்கு எச் ஐ வி கிருமி தொற்றி விட்டால் அது அவர்களுடன் இடம் பெயர்ந்து மற்றவர்களுக்கும் தொற்றிவிடும். அபாயம் உள்ளது.

1  2