• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-18 11:27:27    
நகரங்களில் பணி புரிகின்ற விவசாயிகளுக்கு அறிவூட்டுவது

cri

இதை தடுக்கும் வகையில் சீனா எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய பிரச்சாரத்தை நகரங்களில் நுழையும் விவசாயிகளிடையில் தொடங்கியுள்ளது. தொடர்புடைய அரசுத் துறைகளும் சமூக அமைப்புகளும் அடுத்தடுத்து பல்வகை நடவடிக்கைகளின் மூலம் இந்த பிரச்சாரப் பணியை நடத்தி வருகின்றன. புகை வண்டி நிலையம் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பிரச்சாரம் செய்வது தவிர, போக்குவரத்து வாகானங்களை.யும் பிரச்சார சாதனமாக சீனா மாற்றியுள்ளது.

நகரங்களில் வேலை பார்க்கின்ற விவசாயிகள் புகை வண்டி மூலமே அதிகம் பயணம் செய்கினஅறனர். ஆகவே புகை வண்டி பெட்டிகளில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றி பிரசாரம் செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. அண்மையில் பெய்சிங்கிலிருந்து உள்மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்குச் செல்லும் வழியில் செஞ்சிலுவை சங்கத்தின் தொண்டர்கள் சிலர் பயணிகளுக்கு பிரச்சார தகவல் தாள்களை விநியோகித்த பின் நமது செய்தியாளர் பயணிகளை பேட்டி கண்டார். ஸபேயினிலிருந்து வந்த பயணி ஈக்லைசியாஸ் இந்த பிரச்சார நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்தார்.

எங்கள் நாட்டில் இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இது நல்ல முயற்சி. தனிச்சிறப்புடையது. பலர் இதனால் நன்மை பெறலாம் என்றார்.

முக்கிய ரெய்வே வழிகளில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை ஏற்பாடு செய்த சீனச் செஞ்சிலுவை சங்கத்தின் துணை தலைவர் சியான் யீ பென் அம்மையார் இது பற்றி கூறியதாவது.

எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பெறுவதில் இடம் பெயர்வோர் அக்கறை செலுத்தும் மனிதரில் ஒரு பகுதியாவர். ரெயில் வண்டிகளிலும் ரெயில் நிலையங்களிலும் அவர்களிடையில் பிரச்சாரம் செய்து அனுபம் பெற்ற பின் இந்ச பிரச்சார நடவடிக்கையை மற்ற இடங்களுக்கு விரிவாக்குவோம் என்றார்.

பிரச்சாரம் செய்வது தவிர, சீன சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகள் கிராமங்களில் எய்ட்ஸ் நோய் பற்றிய தடுப்பு அறிவை பிரச்சாரம் செய்ய துவங்கியுள்ளன. சீனாவின் ஒவ்வொரு கிராமத்திலும் தெளிவாக புரியக் கூடியவகையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய பிரச்சாரப் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. நரங்களில் வேலை பார்க்கின்ற விவசாயிகளின் குடும்பத்தினருக்கு எய்ட்ஸ் பற்றிய தகவல்கள் அளிக்கப்படுகின்றன. நகரங்களில் வேலைபார்க்கின்ற விவசாயிகளின் குடியிருப்புக்களில் படங்களைத் திரையிடுவதன் மூலம் அவர்களிடயைடே எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றி பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு ஆண் உறை உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களும் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளின் மூலம் குறிப்பிட்ட விளைவு காணப்பட்டுள்ளது. பெய்சிங்கில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கின்ற விவசாயி சன் ஹூன் இது பற்றி கூறியதாவது நகர வாழ்க்கையுடன் இணையும் போது சுயகட்டுப்பாடு தேவை. பாதுகாப்பற்ற பாலுறவு செயலை தடுக்க வேண்டும். குடும்பத்தின் மகிழ்ச்சியை எப்போதும் மனத்தில் வைக்க வேண்டும் என்றார்.

அண்மையில் சீன அரசு நாடு தழுவிய நகர வேளாண் தொழிலாளர்களிடையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பெறுவது பற்றி பிரசாரக் கல்வி திட்டப் பணியை துவக்கியது. 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை ஊருக்கு திரும்பி வரும் நகரங்களில் வேலையில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒவ்வொருக்கும் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய பிரச்சார தகவலையும் 2 ஆண் உறைகளையும் விநியோகிப்பது, எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய அறிவை "நகரங்களில் சம்பாதிக்கும் விவசாயிகளுக்குக்கான பயிற்சி புத்தக்கத்தில்"வேளாண் மற்றும் கட்டிட துறை அமைச்சகங்கள் சேர்க்கும். வேலையில் ஈடுபடுவதற்கு முன் வேலைப் பாதுகாப்பு மற்றும் உத்தரவாத அமைச்சகம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் போது இரண்டு வகுப்புகளில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பெறுவது பற்றியும் கற்பிக்க வேண்டும் என்பன இந்த திட்டப் பணியின் முக்கிய அம்சங்களாகும். இந்த பிரச்சார நடவடிக்கையின் மூலம் 2006ம் ஆண்டின் இறுதிக்குள் 65 விழுக்காடு வேளாண் தொழிலாளர்கள் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய அறிவை கற்று கொள்வார்கள். 2010ம் ஆண்டின் இறுதிக்குள் இந்த விகிதம் 85 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்று சீன அரசு விரும்புகின்றது.


1  2