• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-20 08:20:34    
பெய்சிங்கில் திரைப்பட துறையின்  வளர்ச்சி

cri
பெய்சிங்கில் திரைப்பட அரங்கத்தின் மாற்றத்தின் வளர்ச்சி பற்றிய கட்டுரையின் இரண்டாவது பகுதியை படியுங்கள்.

1957ம் ஆண்டில் இது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு சீனாவின் முதலாவது அகல திரை நான்கு திசைகளில் பரவும் ஒலி மிக்க திரைப்பட அரங்காக மாறியது. முன்னாள் தலைமை அமைச்சர் சோ அன் லாய் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டார். 2003ம் ஆண்டுக்குப் பிறகு பெய்சிங்கில் 5 நவீன திரைப்பட மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தலைநகர் யுக திரைப்பட வளாகம், துங்குவான் திரைப்பட அரங்கம், நட்சதிர திரைப்பட நகரம், ச்சுக்குவான் திரைப்பட நகரம், ஹைத்தியன் இசைநாடக திரை அரங்கு என அவை அழைக்கப்படுகின்றன. தவிரவும், ஹைத்தியன் தொழிலாளர் இசை நடன அரங்கு, யேன்சா ஒஷானிய திரைப்பட நகரம், ச்சுன்குவான் சன் திரைப்பட நகர் போன்ற பெரிய ரக நவீனமாக்க திரைப்பட மையங்களும் கட்டப்பட்டன.

திரைப்பட துறையின் வேகமான வளர்ச்சியுடன் முப்பரிமாண திரைப்படங்களை திரையிடும் அரங்கை காண மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பெய்சிங் புதிய திரைப்பட கூட்டு தொழில் நிறுவனத்தின் தலைமையில் புதிய ரக நவீன திரை அரங்கை கட்டும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக கீழை நூற்றாண்டு திரைப்பட அரங்கு, உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்டது. பெய்சிங் வுவான் வூஜீஸ் வணிக மையத்தில் திறக்கப்பட்ட நவீன திரைப்பட மையத்தில் சீட்டு விற்பனை ஜன்னல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

1  2