• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-20 08:20:34    
பெய்சிங்கில் திரைப்பட துறையின்  வளர்ச்சி

cri

சீட்டு விற்பனை ஜன்னலின் மேல் திஜிட்டல் திரையின் மூலம் காட்டப்படும் திரைப்படத்தின் பெயர், திரைப்பட அரங்கில் எந்த காண்பிக்கும் அறையின் எண், திரையிடும் நேரம் ஆகிய தகவல்கள் தொடர்ச்சியாக மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன. திரைப்பட சீட்டு விற்பனை ஜன்னலின் இரண்டு பக்கங்களில் திஜிட்டல் தொலைகாட்சி பெட்டி மூலம் திரையிடும் அறையில் இட வரிசைகள் காணப்படுகின்றன. ஆங்கில மொழி வசதியும் உண்டு.

நவீனமாக்கம் தவிர திஜிட்டல் திரைப்பட அரங்கு இப்போது பெய்சிங் நகரவாசிகளின் வாழ்க்கையில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. திஜிட்டல் திரைப்படம் செயற்கை கோள், ஒளித் தட்டு, ஒளிக் கம்பி போன்ற தொழில் நுட்பத்தின் மூலம் ஹாலிவுட் திரைப்படங்களை முதல் காட்சியிலேயே பெய்சிங் வாசிகளுக்கு காட்டப்பட முடியும். மொழி பிரச்சினை திரைப்படம் காட்டப்படுவதற்கு முன்பு சில நிமிடங்களுக்குள் மொழி மாற்றம் செய்யப்படும். திஜிட்டல் திரைப்படம் மறு பதிப்பு, தொகுப்பு, சேகரிப்பு ஆகியவற்றில் வசதியாக இருந்ததால், ஒவ்வொரு திரைப்படத்தின் செலவு 20 அமெரிக்க டாலருக்குள் இருக்கலாம். இதன் விளைவாக திரை அரங்கு நடத்துவோர் திரைப்படங்களைக் காட்டும் திட்டத்தை சுய விருப்பத்தின் படி வகுக்கலாம். திஜிட்டல் திரைப்பட அரங்கை வளர்க்கும் அதேவேளையில் பெய்சிங்கில் செல்லிட பேசி மூலம் திரைப்படம் காட்டும் தொழில் நுட்பம் மக்களிடையே அறிமுகப்படுத்தப்ப்டடுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் இந்த நுட்பம் வெளியிடப்பட்டதும் இளைஞர்கள் இதில் மிகவும் அக்கறை செலுத்தியுள்ளனர். அது மிகவும் வசதியானது என்பது தனிச்சிறப்பாகும். ஆனால் செல்லிட பேசி மூலம் திரைப்படத்தை கண்டுரசிக்க வேண்டு மானால் திரையிடும் வசதி கொண்ட செல்லிட பேசி வாங்க வேண்டும். சாதாரண செல்லிட பேசி மூலம் திரைப்படத்தை பார்க்க முடியாது. ஆகவே செல்லிட பேசி மூலம் திரைப்படம் காண்பிப்பது மிக வேஷன் நிகழ்ச்சியாகும்.

 

அந்நிய நாட்டுப் படங்கள் திரையிடப்படுகின்றனவா?பெய்சிங்கில் இந்தியத் திரைப்படங்கள் காட்டப்படுகின்றனவா? என்று செல்வம் மேலும் கேட்கின்றார்.

சீனா வெளிநாடுகளுக்கு திறந்து வைக்கப்பட்ட ஒரு நாடு. பொருளாதார ஒத்துழைப்பு மட்டுமல்ல பண்பாட்டு ஒத்துழைப்பிலும் சீனா அக்கறை செலுத்துகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான், ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவை தவிர, இந்தியாவிலிருந்தும் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் கொண்டு வரப்படுகின்றன. தற்போது இந்தி மொழியில் தயாரிக்கப்படட தொலைக் காட்சித் தொடர் ஒன்று சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தினமும் இரண்டு தடவை ஒளிபபரப்பப்படுகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பெயர் "சதி சூழ்ச்சியும் காதல் உணர்வும்"என்பதாகும். இந்த தொலைகாட்சி தொடர் திரையிடப்பட்ட பின் பல இளைஞர்களுக்கு இந்தியாவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை அதிகரித்துள்ளது. இவ்வாண்டு சீன-இந்திய நட்புறவு ஆண்டு. இரு நாட்டு பொருளாதார மற்றும் பண்பாட்டு பரிமாற்றம் வளர்ந்து மேலும் கூடுதலான திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் சீனாவுக்கு வரும் என்று நம்புகின்றோம்.


1  2