 அயராத உழைப்பு, தொழிலில் அதிக ஈடுபாடு, விவேகம் ஆகியவை படைத்த சீன நிர்வாக வல்லுநர்கள் படிப்படியாக மேலை நாடுகளின் உழைப்பாளர் சந்தையில் இடம்பிடித்துள்ளனர். சுவீட்சர்லாந்து நாட்டவர்களைப் பொறுத்தவரையில் இந்த சீனர்கள் வலுவான போட்டியாளர்கள்.
மு ஷுபிங் அம்மையார் சென்ற விமானம் ஜெனிவா விமான நிலையத்தில் இறங்கிய அந்த நாள் ஞாயிற்றுக் கிழமை. வீதிகள் ஒரே அமைதியாக இருந்தன. அனைத்து கடைகளும் ஹோட்டல்களும் திறக்கப்படவில்லை. சீனாவில் வாடிக்கையாளர்களுக்கே முதல் சலுகை, ஆனால், சுவீட்சர்லாந்திலோ முதலாளிகள் தமது பணியாளர்களின் நலன்களுக்கே முக்கியம் அளிக்கின்றனர் என்பது, சுவீட்சர்லாந்தில் ஷுபிங் அம்மையாரின் மனதில் பதிந்த வழங்கிய முதலாவது விஷயமாகும்.

ஷுபிங் என்பவர், புதிய தலைமுறை சீனர் அவர் மேலை நாடுகளின் பண்பாட்டை ஏற்றுக்கொண்டு, வெற்றியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றார். 1998ஆம் ஆண்டில் அவர் சுவீட்சர்லாந்துக்குச் சென்றடைந்த போது, சுவீட்சர்லாந்தில் 3774 சீனர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் 2004ஆம் ஆண்டில் இந்த தொகை 6611 ஆக அதிகரித்தது. இன்று ஜெனிவாவில் 1100 சீனர்கள் வாழ்கின்றனர். இது சுவீட்சர்லாந்தின் மூன்றவாது பெரிய சீன நகர்.
சுவீட்சர்லாந்தின் ஹோட்டல் நிர்வாகப் பள்ளிகளில் சீன மாணவர்கள் இரண்டாம் இடம் வகிக்கின்றனர்.ஜுரிக் கூட்டாட்சி பொறியியல் கல்லூரியும் சீன மாணவர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அவர்கள் அங்கு மின் தொழில், ரசாயனம், தகவல் அறிவியல் ஆகிய பாடங்களைப் படிக்கின்றனர். சீன மாணவர்கள் குறிக்கோளுடன் வெற்றிக்காக பாடுபடுபவார்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெற்ற பின் நிர்வாகத் துறையில் பணிபுரிவதை தமது குறிக்கோளாக கொள்கின்றனர். ஆனால் சுவீட்சர்லாந்தில் 30 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே இத்தைகைய குறிக்கோளைக் கொண்டு பயில்கின்றனர் என்பதை சுவிட்சர்லாந்து சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஒரு கள ஆய்வின் முடிவு காட்டுகின்றது.
1 2
|