• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-26 15:40:18    
திறமைமிக்க சீனர்கள்

cri

அயராது உழைத்து, அறிவை பெரும் முயற்சியுடன் பெருக்குவது சீன மாணவர்களின் தனிச்சிறப்பு என்று சுவீட்சர்லாந்தின் பௌரோ சியேலே ஆய்வகத்தின் தலைவர் ரால்ப். ஐசிலே தமது பத்து சீன அறிவியல் பணியாளர்களை மதிப்பிட்டார். அவர்களில் ஒரு பெண் அறிவியல் பணியாளர் சுவீட்சர்லாந்தைஅடைந்த இரண்டாம் நாள், அந்த நாட்டிலுள்ள அனைத்து ஆறுகளின் பெயர்களைத் தெளிவாக கூறினார். சுவீட்சர்லாந்தின் நாணயமான 20 சுவீஸ் பிராங்கில் காணப்படும் இசையமைப்பாளரின் தலைப் படத்தையும் அவர் சரியாக சொன்னார். அவருடைய கூற்றை நிரூபிக்கும் பொருட்டு, எசிலே தமது கைபையிலிருந்து 20 சுவீஸ் பிராங்க் நாணயத்தை வெளியே எடுக்க நேரிட்டது.

60வயதான சென் ச்சியன் ஹொங் அம்மையாரும் அவருடைய கணவர் 62 வயதான வெய் பு ச்சியங்கும் 1998ஆம் ஆண்டு இந்த ஆய்வகத்தில் பணிபுரிய துவங்கினர். சுவீட்சர்லாந்தில் படிப்பும் வாழ்க்கையும் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. வேலை தளங்களிலும் அவர்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதை கண்டு துவக்கத்தில் அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், சீனாவில், பணியாளர்கள் தலைவர்களின் கட்டளைக்கு இணங்க செயல்பட வேண்டும். அனைவரும் முதல் இடத்துக்காக பாடுபடுவது என்ற சூழ்நிலை சீனாவின் பல்கலைகழகத்தில் பரவலாக நிலவுகின்றது.

இத்தகைய எழுச்சியின் ஊக்கத்துடன், மேலும் அதிகமான சீனர்கள் சுவீட்சர்லாந்தின் நிறுவனங்களின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிபுரிவதில் ஆச்சரியமில்லை. எடுத்துக் காட்டாக, சாவ் ஹொவ் தொழில் நிறுவனத்தின் இயக்குநராக 44 வயதான சீனர் சாங் ச்சி ச்சியங் இருக்கின்றார். இந்த தொழில் நிறுவனத்தில் 1300 பணியாளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 24 கோடி சுவிஸ் பிராங்க் வருமானம் ஈட்டியது. ஒரு சீனர் நிர்வாக வல்லுநராக இருப்பதனால், இந்த சாதனை பெறப்பட்டுள்ளது என்று இந்தத் தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் யே ஔலி. பிசர் கூறினார்.


1  2