• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-27 19:44:16    
காலன்செறவருக்கு அஞ்சலி செலுத்தும் வழக்கப் பழக்கம்

cri
கலை.......வணக்கம் நேயர்களே. இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் சீனாவில் ஈம சடங்கு பற்றி கூறுமாறு கேட்டுள்ளார்.

கிளீடஸ்......கலை தமிழ் நாட்டில் பொதுவாக ஒருவர் இறந்த பின் உடனடியாக அவருடைய உடன்பிறப்புகளுக்கும் சக பணியாளர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவிக்க வேண்டும். வீட்டில் சிறப்பறை ஒன்றை ஒதுக்கி இறந்தவரின் நிழற்படத்தை மேசையில் வைக்க வேண்டும். சீனாவில் இதே போன்ற வழக்கம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதா?

கலை......ஆமாம். பொதுவாக ஒருவர் இறந்த பின் தமிழ் நாட்டில் செய்வது போலவே சீனாவிலும் அவரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் அறிவிப்பது வழக்கம். தவிரவும், அவருடைய குடும்பத்தினர்கள் வீட்டில் அவரின் நிழற்படம் கறுப்பு துணியால் வளைத்து மேசையின் நடுவில் வைக்ககப்படுகின்றது. நிழற்படத்தின் முன்னாள் Fragrant போடப்பட்ட கருவி வைக்கப்படுகின்றது. அறையில் அஞ்சலி செலுத்தும் தாள் பூக்களால் கட்டப்பட்ட மலர் வளையங்கள் வைக்கப்படுவதற்கான இடம் ஒதுக்கப்படுகின்றது. நண்பர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதி வழங்கப்படுகின்றது.

கிளீடஸ்........பொதுவாக இறந்தவர் எத்தனை நாட்கள் வீட்டில் வைக்கப்பட வேண்டும்?

கலை.....ஒ, வீட்டில் வைக்கப்படுவதற்குப் பதிலாக மருத்துவ மனையின் இறந்த ஐஸ் காற்று வசதி கொண்ட அறையில் அடுப்பு வரிசையில் பெட்டியுள்ளே சடலம் வைக்கப்பட வேண்டும். வசிப்பிடத்துக்குப் பொறுப்பான காவல் நிலையத்திலிருந்து இறந்தவருக்கான சான்றிதழை வாங்க வேண்டும். பிறகு மருத்துவ மனையின் சவக் கிடங்கில் சடலத்தை எடுத்து தீ எரிக்கும் ஈம சடங்கு மையத்திற்கு அனுப்ப வேண்டும். உங்கள் நாட்டில் எப்படி செய்வது?

கிளிட்டஸ்.........தவிர, பொதுவாக ஆள் இறந்த பின் அடக்கம் செய்யப்படுமா அல்லது தீயில் எரிக்கப்படுமா?

1  2