கலை......சீனாவில் நகரங்களில் முழுமையாக சடலம் தீ எரிக்கப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும். சிலர் அவர் பிறந்த ஊருக்கு சவப் பெட்டியில் எடுத்துக் செல்லப்பட்டு அங்கே அடக்கம் செய்யப்படும்.
கிளிட்டஸ்......கல்லறையில் அடக்கம் செய்ய ஆகும் செலவு எவ்வளவு?
கலை......பொதுவாக தரம் பார்க்க வேண்டும். எலும்பு சாம்பல் வைக்கப்படும் மர சவப் பெட்டி 500 யுவான் முதல் ஐயாயிரம் யுவான் வரை விற்கப்படுகின்றது. பொதுவாக மக்கள் நடுத்தர விலையுள்ள சவ பெட்டி தேர்வு செய்து பயன்படுத்துவது வழக்கம்.
கிளிட்டஸ்.....3 நாட்கள் மருத்துவ மனையில் வைக்கப்பட்டு எரிக்கும் மையத்துக்கு அனுப்பிய பின் எதாவது ஈம சடங்கு நடைபெறுகின்றதா?
கலை.....இயல்பு. இந்தியாவில் எப்படி செய்வது எனக்கு தெரியாது. சீனாவில் தீயெரிக்கும் முன் விடையளிக்கும் ஈம சடங்கு நடைபெற வேண்டும். தெரிந்த குடும்பத்தினர்கள், உடன்பிறப்புகள், நண்பர்கள் அனைவரும் முடிந்த வரை ஈம சடங்கில் கலந்து கொள்கின்றனர்.
கிளிட்டஸ்.......அப்போது எதாவது பேச வேண்டுமா?
கலை.....வேண்டும். இறந்தவரின் வாழ்க்கை வரலாறு பற்றி அறிமுகபடுத்த வேண்டும். அப்புறம், குடும்பத்தினர்கள் கடைசியாக இறந்தவர் வைக்கப்பட்ட சவ பெட்டியின் பக்கத்துக்கு வந்து அவரிடம் விடை அளிக்க வேண்டும்.
கிளிட்டஸ்......தீ எரிக்கப்பட்ட பின் கல்லறையில் அடக்கப்பட வேண்டும். அப்படிதானே.
கலை.....ஆமாம். பொதுவாக மூன்று நாட்கள் கழிந்த பின் குடும்பத்தினர்கள் ஈம சடங்கு மையத்துக்குச் சென்று எலும்பு சாம்பல் நிறைந்த சவ பெட்டியை கொண்டு கல்லறையில் அடக்க வேண்டும்.
கிளிட்டஸ்......கல்லறையில் அடக்கப்படும் இடம் இலவசமாக வழங்கப்படுகின்றதா?
கலை.....அப்படி இல்லை. அடக்கப்படும் இடம் தனிபட்ட முறையில் செலவிட வேண்டும்.
கிளிட்டஸ்......எவ்வளவு தேவை?
கலை......பொதுவாக 1.2 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய இடம் வாங்கினால் 12 ஆயிரம் யுவான் ஆகும். கல்லறையின் மையத்திலுள்ள இடங்களில் இருக்கும் சவ இடத்தை வாங்கினால் விலை கூடுதலாக இருக்கும். கல்லறையின் எல்லைப் பக்கத்தில் சவ இடம் இருந்தால் விலை குறைவு. 9 ஆயிரம் யுவான் போதும். 1 2
|