கலை.....ஆமாம். சாதாரண நாட்களில் மக்கள் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுகின்றனர். சுற்று பயணம் செய்யும் வாய்ப்பு மிக குறைவு. காலமானவருக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை பயன்படுத்தி மன அமைதியை அடையலாம். ஆகவே குடும்பத்தினர்கள் கல்லறையில் அஞ்சலி செலுத்திய பின் பக்கத்திலுள்ள பூங்கா, அல்லது இயற்கை வளப்புள்ள இடங்களை தேர்வு செய்து தூய்மையான காற்று வாங்க போவார்கள்.
கிளீட்டஸ்.....ஓ எனக்கு புரிந்தது. இது நல்ல பழக்க வழக்கமாகும். இந்த சுற்றுப் பயணத்தின் மூலம் உடன்பிறப்புகளிடையே புரிந்துணர்வு அதிமகாகும். சக பணியாளர்களிடையும் அப்படியே நடத்தலாம் அல்லவா? கலை.....ஆமாங்க. குடும்பத்தினர்களிடையில் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளலாம். பணியாளர்கள் இந்த நாளை வாய்ப்பாக பயன்படுத்தி வசந்த கால சுற்றுலா செய்யலாம். கிளீட்டஸ்.......சுற்று பயணம் செய்யும் போது உணவு எப்படி?
கலை......சீனாவில் சிங்மின் நாளிடையில் வசந்த காலம் வந்தது. தரையில் முளையப்பட்ட காட்டு காய்களை பறித்து சிற்றுண்டி உணவு சமைத்து வெளியே எடுத்து சுற்று பயணம் செய்யும் வழக்கம் சீனாவில் உண்டு. இப்போது வேகமான வாழ்க்கையாகிவிட்டது. வெளியே காட்டு காய்களை தேடி பறிப்பது மிக குறைவு. காய் வளர்ப்பு பண்ணையில் காட்டு காய்கள் வளர்க்கப்படுகின்றன. சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்காக சிற்றுண்டி தயாரிக்கின்றன. ஆகவே நீங்கள் கடைக்கு போய் சிற்றுண்டி வாங்கி உட்கொண்டால் போதும்.
கிளீட்டஸ்......கலை இன்றைய நிகழ்ச்சியில் உங்களுடன் சீனாவில் ஈம சடங்கு பழக்கவழக்கம் பற்றி நேயர்களுக்கும் வளவனூர் புதுப் பாளையம் எஸ் செல்வம் அவர்களுக்கும் விளக்கம் அளித்த பின் நானும் இத்துறை பற்றிய சீன மக்களின் பழக்க வழக்கத்தை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
கலை.....நன்றி சொல்ல வேண்டும். இனிமேல் எதாவது வினா இருந்தால் தாராளமாக முன்வையுங்கள். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் தி. கலையரசியும் தமிழ் செல்வனும் மாறி மாறி உங்களுக்கு விடை அளிப்பார்கள். வணக்கம் நேயர்களே. 1 2
|