• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-25 16:46:10    
வரலாற்று மீனாய்வு

cri
சீன வானொலி நிலையம். வணக்கம் நேயர்களே இவ்வாண்டு சீன வானொலி நிலையம் நிறுவப்பட்டதன் 65வது நினைவு ஆண்டாகும். இதை முன்னிட்டு《நானும் சீன வானொலி நிலையமும்》என்ற தலைப்பில் வானொலி நிலையம் பொது அறிவு போட்டியை மே திங்கள் 22ம் நாள் துவங்கியுள்ளது.

ஒரேயொரு அரசு நிலை வெளிநாட்டு வானொலியாகிய சீன வானொலி நிலையம் எதற்காக நிறுவப்பட்டது?எவ்வாறு வளர்ந்துள்ளது? இந்த கேள்விகளுடன் எங்களோடு இணைந்து அதன் வரலாற்றை மீனாயுவு செய்ய அழைக்கிறோம். பொது அறிவு போட்டியின் முதலாவது கட்டுரையின் தலைப்பு வரலாற்றின் மீனாயுவு என்பதாகும். கட்டுரை ஒலிபரப்புவதற்கு முன் இது தொடர்பான இரண்டு வினாக்களை முன்வைக்கின்றோம். கவனமாக பதிவு செய்து கொள்ளுங்கள். முதலாவது வினா சீன வானொலியின் முதலாவது அறிவிப்பாளர் யார்?இரண்டாவது வினா 1950ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சீன வானொலியின் பெயர் என்ன?

40ம் ஆண்டுகளின் துவக்கத்தில் சீனா ஜப்பானிய ராணுவ வெறியின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் இருந்தது. அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமையிலான ஆயுத படைப் பிரிவுகளும் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய சக்தியாக மாறின. இந்த போராட்டத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அமைந்த சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள யேன் ஆனில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யேன் ஆன் சின்குவா வானொலி நிலையத்தை நிறுவியது. 1941ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 3ம் நாள் ஜப்பானிய மொழியில் XNCR என்ற பெயரில் சின்குவா வானொலி நிலையம் ஒலிபரப்ப துவங்கியது. அதன் நேயர்கள் சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானிய படையினர்களாவர். காலஞ்சென்ற போரை எதிர்க்கும் ஜப்பானிய அம்மையார் ஹரா கியோஷி சின்குவா வானொலி நிலையத்தின் முதலாவது அறிவிப்பாளராக பணிபுரிந்தார். அப்போது முதல் வெளிநாட்டவர்களுக்கான அன்னிய மொழி சீனாவிலிருந்து ஒலிபரப்பப்பட்டது. பின்னர், 1941ம் ஆண்டு டிசெம்பர் 3ம் நாள் சீன வெளிநாட்டு ஒலிபரப்புத் துறை துவங்கிய நாளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1  2